ஈரோடு, டிச.24
ஈரோடு மாவட்டம், தாளவாடி வட்டாரத்தில் கரும்பு சாகுபடி செய்துள்ள விவசாயிகளுக்கு வேண்டுகோள் ஒன்றை வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் விடுத்துள்ளார்.
கரும்பில் இடைக்கணுத் துளைப்பானின் தாக்குதல் மகசூல் இழப்பு மற்றும் சர்க்கரையின் தரம் குறைய முக்கிய காரணம் ஆகும்.
கரும்பில் இடைக்கணுத் துளைப்பான் தாக்குதலும் அதன் கட்டுப்பாட்டு முறைகள்
தாக்குதலின் அறிகுறிகள்
- புழுக்கள் இரண்டு கணுக்களுக்கு இடைப்பட்ட பகுதியில் நுழைந்து சென்று திசுப்பகுதியைத் தின்று அழிக்கும்.
- கரும்பின் கணுவிடைப்பகுதி தாக்கப்பட்டு சிறியதாகக் சுருங்கிக் காணப்படும்.
- கரும்பில் பல துளைகளின் அருகில் புழுவின் எச்சம் காணப்படும்.
- இடைக்கணு துளைப்பான் தாக்கும் போது கரும்பு வலுவிழந்து முறிநது கீழே விழுந்து விடும்.
- தாக்கப்பட்ட தண்டுகளின் திசுப்பகுதிகள் இளஞ்சிகப்பு நிறத்தில் காணப்படும்.
கட்டுப்படுத்தும் வழிகுறைகள்
- 5வது, 7வது மற்றும் 9வது மாதங்களில் சோகை உரித்து அதனை மண்ணில் பரப்பி அல்லது புதைத்து விட வேண்டும்.
- முட்டையை சேகரித்து அழிக்க வேண்டும்.
- நட்ட 150 மற்றும் 210 நாட்கள் கழித்து தோகை உரித்தல் வேண்டும்.
- தேவைக்கு அதிகமான தழைச்சத்து உரங்கள் கரும்பில் பயன்படத்துதலை தவிர்க்க வேண்டும்.
- முட்டை ஒட்டுண்ணியான ட்ரைக்கோகிரமா கைலோனிஸ் அட்டையை நட்ட 4 மாதத்திலிருந்து இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை வீதம் 6 முறைக் கட்ட வேண்டும்.
- இனக்கவர்ச்சிப் பொறிகளை ஏக்கருக்கு 6 பொறிகள் என்ற வீதம் 15 மீ இடைவெளியில் 5வது மாதம் வைக்க வேண்டும்.
- இனக்கவர்ச்சி மருந்தினை 75 நாட்கள் இடைவெளியில் இருமுறை மாற்ற வேண்டும்.
இத்தகவலை தாளவாடி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் வெ.மகாலிங்கம் வெளியிட்ட தொழில்நுட்ப செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
Spread the love