May 18, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

கரும்பு பயிரில் செவ்வழுகல் நோய் மேலாண்மை

பொங்கல் திருநாள் என்றலே நம் அனைவருக்கும் நினைவில் தோன்றுவது கரும்பு ஆகும். இதன் அறிவியல் பெயர் சக்கரம் ஆபிசினரம். இவை “கிரமினோ” என்கிற தாவரக் குடுப்பத்தைச் சேர்ந்ததாகும். இது நன்செய் நிலத்தில் விளையக்கூடிய புல்வகையைச் சேர்ந்த சர்க்கரைப் பயிராகும்.வெப்ப மற்றும் துணை வெப்ப மண்டலத்தில் நன்கு செழித்து வளரும். 90க்கும் மேற்பட்ட நாடுகளில் சுமார் 20 மில்லியன் எக்டருக்கு மேல் சாகுபடி செய்யப்படுகிறது. க்யூபாவில் அதிக அளவில் கரும்பு பயிரப்படுவதல் ” உலகின் சர்க்கரை கிண்ணம்” என்று அழைக்கப்படுகிறது.கரும்பில் இருந்து பெறப்படும் முக்கிய சர்க்கரை சுக்ரோஸ் ஆகும். ஆனால் கரும்பில் செவ்வழுகல் நோய் தாக்கத்தினால் சுக்ரோஸ் மற்றும் மகசூல் வெகுவாக குறைகிறது. இந்நோய் கரும்பு சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு ஓர் மிகப்பெரிய சவலாக உள்ளது. ஆதலால் இக்கட்டுரையில் செவ்வழுகல் நோயின் அறிகுறிகள் மற்றும் மேலாண்மை முறைகள் பற்றி காண்போம்.

நோயின்அறிகுறிகள்:
• கரும்பின் தூர்களின் கீழேயுள்ள தோகைகள் வெளுத்து பழுப்பு நிறமாக மாறும்.
• தாக்கப்பட்ட கரும்பின் இலைகள் ஆரஞ்சு நிறத்துடன் கூடிய மஞ்சள் நிறமாக மாறி பின்பு காய்ந்து விடும்.
• இலையின் நடுநரம்பு பகுதிகள் அடர்சிவப்பு நிறமாக மாறிவிடும்.
• கரும்பை இரண்டாக பிளந்து பார்த்தல் உட்புற பகுதி சிவப்பு நிறமாக காணப்படும்.
• மிகவும் தாக்கப்பட்ட கரும்பின் உட்புற பகுதிகள் நீளவாக்கில் நோய்காரணியான பூஞ்சைகள் காணப்படும். பின்னர் கரும்பு பயிர் வாடி காய்ந்து விடும்.
நோய்காரணி மற்றும் ஏற்ற காலநிலைகள்:
• இந்நோயனது கோலிடோடிரைகம் பால்கேட்டம் என்ற மண் வாழ் புஞ்சையினால் தோற்றுவிக்கப்படுகிறது.
• இப்பூஞ்சையானது கரும்பு இலைகளின் மேற்பரப்பு பகுதிகளிலும் மற்றும் வாஸ்குலர் கற்றைகளுகிடையே காணப்படும்.
• 28 முதல் 32℃ வெப்பநிலை மற்றும் 70 முதல் 85 சதம் காற்றின் ஈரப்பதம் நோயை ஏற்படுத்த ஏற்ற காலநிலைகளாகும்.

பரவும் விதம்:
• விதைக்கரனைகல், மண் மற்றும் பாசன நீர் மூலம் இந்நோய்பரவுகிறது.

மேலாண்மை முறைகள்:
● தரமான நோயற்ற விதைக்கரனைகளை நடவுக்கு பயன்படுத்த வேண்டும்.
● நீரினை நோய்தாக்கிய வயலின் வழியாக பாய்ச்சுவதைத் தவிர்க்க வேண்டும்.
● தொடர்ந்து கட்டைபயிர் பயிர் சாகுபடி செய்யக்கூடாது.
● பயிர் சுழற்சி மேற்கொள்ள வேண்டும்.
● நோய் எதிர்ப்பு திறன் கொண்ட கோ86249, கோ93009, கோ94008, கோ99006, கோ க 99061, கோ.க 22 மற்றும் கோ.சி 95071 இரங்களைப் பயிரிடலாம்.
● நோய்த்தடுப்பு முறையாக ஒரு ஏக்கருக்கு ட்ரைகோடெர்மா விரிடி மற்றும் சூடோமோனாஸ் 4 கிலோவை 50 கிலோ தொழுஉரத்துடன் கலந்து இட வேண்டும்.
● விதைக்கரனைகளை 50-54℃ (5 முதல் 6 மணி நேரம்)நீராவி சிகிச்சைக்கு உட்படுத்தி நடவு செய்யலாம்.
● 250 லிட்டர் தண்ணீரில் 200 கிராம் கார்பன்டாசிம் மற்றும் 2.5 கிலோ யூரியா சேர்த்து ஐந்து நிமிடம் கரனைநேர்த்தி செய்து நடலாம்.

தகவல் : இரா.ஜெயசங்கர்மூர்த்தி (முதுகலை வேளாண்மை), கோழிப்பட்டு, விழுப்புரம் மாவட்டம், கைபேசி : 89404 75344, மின்னஞ்சல்: agrijay102@gmail.com
செ.லெட்சுமணன், (இளங்கலை வேளாண்மை) கரும்பு அலுவலர், பண்ணாரி அம்மன் கரும்பு ஆலை, செங்கம் வட்டம், திருவண்ணாமலை மாவட்டம், கைபேசி : 88255 12841, மின்னஞ்சல்: laksh. agri@gmail.com. இரா.வெங்கடேஷ் (இளங்கலை வேளாண்மை), பொற்படாக்குறிச்சி, கள்ளக்குறிச்சி மாவட்டம், கைபேசி : 86673 39761, மின்னஞ்சல்:agrivenkatesh20@gmail.com தொடர்புகொள்ளலாம்.

Spread the love