June 25, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

கரும்பு பயிரில் மாவுப்பூச்சி மற்றும் குருத்து முருக்கல் பூஞ்சாண நோயை கட்டுப்படுத்த மாவட்ட ஆட்சித் தலைவர் வேண்டுகோள்

அரியலூர், ஜூன் 22

அரியலூர் மாவட்டத்தில் கரும்பு பயிர் 4,400 எக்டரில் சாகுபடி செய்யப்படுகிறது. தற்போது, 2400 எக்டரில் மறு தாம்பு கரும்பு பயிர் உள்ளது. மேலும், 2000 எக்டரில் நடவு செய்யப்பட உள்ளது. இம்மாவட்டத்தில் கோ 86032, கோ(வி) 09356, கோ 11015 மற்றும் கோ (ஜி) 7 ஆகிய ரகங்கள் சாகுபடி செய்யப்படுகிறது. இக்கரும்பில், மாவுப்பூச்சி மற்றும் குருத்து முருக்கல் என்ற பொக்காபாங் பூசண நோய் தாக்குதல் திருமானூர் வட்டாரத்தில், காரைப்பாக்கம், மஞ்சமேடு, பாளையப்பாடி, திருமழப்பாடி, மாத்தூர் ஆகிய கிராமங்களில் பாதிப்பு காணப்படுகிறது. கரும்பு பயிரில் மாவுப்பூச்சியானது இளஞ்சிவப்பு நீள் வட்ட வடிவ பூச்சிகள் கணுக்களுக்கு கீழே இலைப்பரப்புகளின் அடியில் காணப்படும். இளஞ்சிவப்பு நிற மாவுப் பூச்சிகள் கரும்பின் வளர்ச்சியைக் குறைப்பதோடு வேரினையும் பாதிக்கும். மேலும், கட்டை கரும்பில் வளர்ச்சி குன்றி சிறிய கணுக்கள் தோன்றி, இலைகள் மஞ்சள் நிறத்தில் காணப்படும். தேன் போன்ற திரவத்தின் மேல் கரும்பூசனப்படலம் உருவாகிக் கரும்பு கருநிறமாகக் காட்சி அளிக்கும். மாவுப்பூச்சி தாக்கிய கரும்பில் எறும்புகளின் நடமாட்டம் அதிக அளவில் தென்படும். இதனால் கரும்பு பயிர் வளர்ச்சி குன்றி மகசூல் இழப்பு ஏற்படும்.

கரும்பு பயிரில் குருத்து முருக்கல் என்று அழைக்கக்கூடிய பொக்காபாங் என்ற இந்நோய் புஸேரியம் மொலினிபாமே என்ற பூஞ்சாணம் மூலம் பரவக்கூடியதாகும். இதனால் பாதிக்கப்பட்ட இலைகள் வெளிர் மஞ்சள் நிறத்தில் இலைகள் சுருங்கி, நீளம் குறைந்து, முறுக்கி இலை வடிவம் மாறி காணப்படும். மேலும், கரும்பின் அடியில் காணப்படும் இலை கத்தி போன்று அகலம் குறைந்து நீண்டு, கரும்பு வளர்ச்சி குன்றி அரை வட்ட வடிவில் வளைந்து காணப்படும். இதனால் கரும்பு பயிர் வளர்ச்சி குன்றி மகசூல் இழப்பு ஏற்படும்.

இது குறித்து ஆய்வு செய்ய கரும்பு இனப்பெருக்க மையம் கோயம்புத்தூர், பூச்சியியல் துறை மூத்த விஞ்ஞானிகள் முனைவர் கீதா மற்றும் ஸ்டாலின், நோயியல் துறை மூத்த விஞ்ஞானி முனைவர் விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய குழுவும், வேளாண்மை இணை இயக்குநர் மற்றும் வேளாண்மை துறை அலுவலர்கள் மற்றும் கோத்தாரி சுகர்ஸ் ரூ கெமிக்கல்ஸ் நிறுவனத்தின் பொது மேலாளர் ஜான் பாஸ்கோ, முதுநிலை மேலாளர் ரவிக்குமார் ஆகியோர் அடங்கிய குழுவும் இணைத்து கள ஆய்வு 16.06.2022 அன்று மேற்கொண்டது. இக்குழு கள ஆய்வு மேற்கொண்டதில் நஞ்சை பகுதி கரும்பில் மாவுப்பூச்சி மற்றும் பொக்காபாங் பூசண நோய் தாக்குதல் அதிகமாகவும், இறவை புஞ்சை பகுதியில் பயிரிடப்பட்ட கரும்பில் தாக்குதல் குறைவாகவும் இருப்பது கண்டறியப்பட்டது.

இக்குழுவானது, மாவுப்பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த இமிடாகுளோர்பிட் 17.8 மூளுடு 0.3 மில்லி/லிட்டர், பொக்காபாங் பூசண நோய் தாக்குதலை கட்டுப்படுத்த புரோப்பிகோனோசோல் (25% நுஊ) 1 மில்லி/லிட்டர் அல்லது கார்பன்டசிம் 50% றுP 1 கிராம்/லிட்டர் அல்லது காப்பர் ஆக்ஸி குளோரைடு 50% றுP 1 கிராம்/லிட்டர் என்ற அளவிலும் கலந்து பாதிக்கப்பட்ட நுனி குருத்து பகுதியில் நன்கு நனையும்படி தெளிக்க பரிந்துரைக்கப்பட்டது. தெளிப்பு திரவம் குறைந்தபட்சம் 400 லிட்டர் இருக்க வேண்டும்.

மேலும், கரும்பு தொடர்ச்சியாக 3 முறைக்கு மேல் பயிரிடக்கூடாது எனவும், பயிர் சுழற்சி முறையினை பின்பற்றி, ஏக்கருக்கு 5 மெ.டன் தொழு உரம் அல்லது வேப்பம் புண்ணாக்கு 1 மெ.டன் இட வேண்டும் எனவும் பரிந்துரைக்கப்பட்டது.

மேலும், நோய் பாதிக்கப்பட்ட இடங்களில் கார்பன்டசிம் 50% றுP ஒரு லிட்டர் தண்ணீருக்கு 1 கி. என்ற அளவிலும் அல்லது காப்பர் ஆக்ஸி குளோரைடு 50% றுP ஒரு லிட்டர் தண்ணீருக்கு 2 கி. என்ற அளவிலும் கலந்து பாதிக்கப்பட்ட இடங்களில் வேர்பகுதியில் ஊற்ற வேண்டுமென பரிந்துரைக்கப்பட்டது. மேற்கண்ட பரிந்துரைகளை பின்பற்றி விவசாயிகள் கரும்பில் ஏற்படும் மாவுப்பூச்சி மற்றும் பொக்காபாங் பூசண நோய் தாக்குதலை கட்டுப்படுத்திட மாவட்ட ஆட்சித் தலைவர் கேட்டுக்கொண்டார்.

Spread the love