January 23, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

கரும்பு விவசாயிகளுக்கு ரூ.150.89 கோடி திட்டங்களை தொடங்கி வைத்த ஸ்டாலின்

சென்னை, ஜன.8

கரும்பு விவசாயிகளுக்கு ரூ.150.89 கோடி ஊக்கத் தொகை வழங்கியது உள்ளிட்ட பல்வேறு வேளாண் திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்தார்.

தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்றதில் இருந்து பல்வேறு திட்டங்ககளை செயல்படுத்தி வருகிறார். அந்தவகையில் நேற்று சென்னை தலைமைச்செயலகத்தில் இருந்தவாறு பல்வேறு விவசாயிகள் நலன் சார்ந்த திட்டங்களை தொடக்கி வைத்தார். வேளாண்மை பொறியியல் துறை மூலம் விவசாயிகள் பயன்பெறும் வகையில், வேளாண் இயந்திரங்களை வாடகைக்கு விடும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அப்படி அரசு சார்பில் வாடகைக்கு வழங்கப்படும் வேளாண் இயந்திரங்களை, விவசாயிகள் வீட்டிலிருந்தபடியே முன்பதிவு செய்ய இ-வாடகை ஆன்லைன் செயலியை உருவாக்கப்பட்டிருக்கிறது. இதனையும் முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.

அதேபோல், கன்னியாகுமரி, தர்மபுரி, திண்டுக்கல், தேனி, கிருஷ்ணகிரி, தென்காசி, பெரம்பலூர், திருவாரூர் மாவட்டங்களில் கட்டப்பட்டுள்ள வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண்மை வணிகத்துறை கட்டடங்கள், வேளாண்மை பொறியியல் துறை அலுவலகக் கட்டடம் ஆகியவற்றையும் திறந்து வைத்தார். மேலும், 2020-21 ஆண்டில் அரவைப் பருவத்தில் சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு வழங்கிய 91,120 விவசாயிகளுக்கு கரும்பு உற்பத்தி ஊக்கத்தொகை மற்றும் சிறப்பு ஊக்கத்தொகையாக மொத்தம் ரூ.150.89 கோடி வழங்கும் பணியினை தொடங்கி வைத்தார். முதல்கட்டமாக 5 விவசாயிகளுக்கு ஊக்கத்திகையினை வழங்கினார்.

Spread the love