August 13, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

கறம்பக்குடியில் தரிசு நிலங்களை சாகுபடி நிலங்களாக மாற்றும் பயிற்சி

புதுக்கோட்டை, டிச.23

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி வட்டாரம், கலிராயன்விடுதி கிராமத்தில் மாநில விரிவாக்கத் திட்டங்களின் உறுதுணை சீரமைப்பு திட்டத்தின் கீழ்-2021-22ம் ஆண்டிற்கான மாவட்ட அளவிலான விவசாயிகள் பயிற்சி தலைப்பு தரிசு நிலங்களை சாகுபடி நிலங்களாக கொண்டு வருதல் பற்றி புதிய தொழில்நுட்பங்கள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது. இவ்விழாவிற்கு வேளாண்மை உதவி இயக்குநர் லூர்து ராயப்பன், தலைமையேற்று பேசுகையில் தரிசு நிலங்களை சாகுபடி நிலங்களாக மாற்றி உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என எடுத்து கூறினார்.

முனைவர் நெல்சன் நவமணிராஜ், உதவி பேராசிரியர், வேளாண்மை அறிவியல் நிலையம், வம்பன், இப்பயிற்சியில் கலந்துகொண்டு தரிசு நிலமேம்பாடு பற்றி விவசாயிகளுக்கு எடுத்து கூறி அனைத்து நிலங்களும் சாகுபடி நிலங்களாக மாற்றி உற்பத்தியை அதிகரிக்கவேண்டும் மற்றும் தரிசு நிலங்களை சுத்தம் செய்தல், ஆழா உழவு செய்தல், பண்ணை குட்டைகள் அமைத்து நீரை சேமித்தல், மண் ஆய்வின்படி உகந்த பயிர்ளை பயிரிடுதல், அதிக அளவு இயற்கை உரங்களை மண்ணிற்கு இடவேண்டும் என எடுத்து கூறி அதற்கான புதிய தொழில்நுட்பங்களை வழங்கினார்.
உதவி வேளாண்மை அலுவலர் பலால்சாமி, இக்கிராமத்தில் உள்ள தரிசு நிலங்களை கேட்டறிந்து அதை சாகுபடி நிலமாக்குவதற்கு என்ன செய்யலாம் என்பதை பற்றி எடுத்துரைத்தனர். ஜகுபர் அலி, வட்டார தொழில்நுட்ப மேலாளர் அனைவருக்கும் நன்றி கூறினார். இவ்விழாவில் இயற்கை சார்ந்த கருத்து கண்காட்சி அமைக்கப்பட்டு கலிராயன்விடுதி விவசாயிகள் அனைவரும் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

இவ்விழா ஏற்பாடுகளை உதவி தொழில்நுட்ப மேலாளர் துரைராஜ் மற்றும் சுப்பிரமணி ஆகியோர்கள் செய்திருந்தனர்.

Spread the love