August 13, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

கறவை மாடுகளில் ஏற்படும் காம்பு அடைப்பும் அதன் தீர்வும்

அதிக சத்தான உணவுப்பொருட்களின் உற்பத்தியாளராக மட்டுமல்லாமல் ஏழை விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்கும் விவசாய சமூகத்தின் அனைத்து செழிப்பிற்கும் பால் துறை முக்கியமானது. பால் பற்றாக்குறையாக இருந்த ஒரு நாடு இப்போது உலகின் முன்னணி பால் உற்பத்தியாளராக மாறிவிட்டது என்பது பெருமைக்குரிய விஷயம். பால் உற்பத்தியில் தமிழகம் எட்டாவது இடத்தில் உள்ளது.

மடிக் காம்பு அடைப்பு என்றால் பால் கறக்கும் போது, பால் வெளியே வர முடியாத நிலை தான் காம்பு அடைப்பு. இது ஏற்பட பல காரணங்கள் உள்ளன. காம்பு அடைப்பு எங்கு வேண்டுமானாலும் ஏற்படலாம். அதாவது காம்பு நுனியிலோ அல்லது நடுவிலோ அல்லது அடி பகுதியிலும் ஏற்படலாம்.

  1. காயத்தினால் ஏற்படும்
  2. மடி வீக்கத்தினால் ஏற்படும்
  3. பிறவி கோளாறுகளால் ஏற்படும்
  4. காயத்தினால் ஏற்படும் காம்பு அடைப்புகள்

Imperforate teat : காம்பின் நுனி துவாரம் மிகவும் சிறியதாக இருக்கும் நிலை. பால் கறக்கும் போது பால் வெளியே வர போதுமான அளவு துவாரம் இல்லாததால் பால் வெளியேறுவதில் சிரமம் ஏற்படும். மேலும் மடியில் உள்ள அனைத்து பாலையும் கறக்க இயலாது.

Spider teat : காம்பரை ஆனது மிருதுவான திசுவால் ஆனது. காம்பரையில் காயம் ஏற்பட்டால் புது வளர் சிறுமணித் திசு வளர்வதால் காம்பரை அடைக்கப்படுகிறது. அடைப்பு ஏற்பட்ட இடத்திற்கு மேலே பால் ததும்புவது தெரியும். அடைப்பு ஏற்பட்ட இடத்தை தொட்டு பார்த்தால் சிறிது கடினமாக இருக்கும்.

காம்பரையில் தசை வளர்த்தல் : காம்பு துவாரம் முதல் மடி வரையிலும் உள்ள காம்பரையில் தடினமான திசு வளர்வதால் காம்பில் அடைப்பு ஏற்படுகிறது.

  1. மடிவீக்க நோயினால் காம்பு அடைப்பு
    மடி வீக்கம் சரியாக சிகிச்சை அளிக்கபடாவிட்டால் சில நாட்கள் கழித்து காம்பு அரையில் உள்ள மிருதுவான திசு கடினமான தசை நார் திசுகளாக மாறி முழுமையாக காம்பு அடைப்பு ஏற்படும்.
  2. நுனி காம்பில் அடைப்பு
    இதற்கு காம்பு பிளக் சிறிது நாட்களுக்கு உபயோகித்தால் நுனி காம்பு அடைப்பு சரியாகும்.
  3. புற்று கொத்து
    காம்பரையின் உட்புற சுவற்றில் இருந்து சிறிய கடலை அளவில் புற்று கட்டிகள் வளர்வதால் காம்பு அடைப்பு ஏற்படுகிறது.
  4. பால்கல்
    பாலில் உள்ள தாது உப்புகள் பாலரையில் சிறு, சிறு மணல் கற்கள் போல மாறி விடுகிறது. சில சமயம் இது ஓன்றாக சேர்த்து கல்லாக மாறி விடும். இது பாலரையின் துவாரத்தை சில சமயம் அடைத்து விடும். பெரும்பாலும் சிறு மணல் கற்களாக இருக்கும் போது பால் கரக்கும் பெரிய கல்லாக மாறினால் கால்நடை மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டும்.

6 .காம்பு சிராய்ப்பு
கறவை மாடுகளில் கம்பிகள் மூலமாகவோ, முட்கள் குத்துவதால் சிராய்ப்பு ஏற்படும். சில சமயம் மாடுகள் படுத்து எழும் போது தன்னுடைய பின்னங்கால் காம்பில் மிதிபடும் போது சிராய்ப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. சிராய்பு ஏற்பட்ட இடத்தை தண்ணீர் கொண்டு நன்கு கழுவ வேண்டும். பின் கிருமி நாசனியை கொண்டு நன்கு சுத்தம் செய்ய வேண்டும். மேலோட்டமாக உள்ள சிறிய சிராய்ப்புக்கு, களிம்பு தடவினால் சரியாகிவிடும். சிறிது ஆழமாக சிராய்ப்பு ஏற்பட்டால் கால்நடை மருத்துவரை அணுகி தையல் போட வேண்டும்.

  1. காம்பில் மரு உண்டாகுதல்
    காம்பின் தோலில் ஓன்று / பல மருக்கள் தோன்றக்கூடும். இது பால் கரப்பதில் எந்த இடையூரையும் ஏற்படுத்தாது. ஆனால் அதில் வெடிப்பு ஏற்பட்டாலோ வலி உண்டாகும்.
  2. மடிப்புரை (fistula)
    மடியரையிலிருந்து காம்பு தோல் வரை சிறிய துலை போல் பாதை இருந்தால் மடியரையிலிருந்து பால் வெளியே வரக்கூடும் அல்லது கசியும். இதனால் பால் வீணாவது மட்டும் அல்லாமல் அதன் வழியாக நுண்கிருமி உள்ளே புகுந்து மடிவீக்க நோய் வரும்.
  3. காம்பில் ஏற்படும் பிறவி கோளாறு
    Supernumary teat – கறவை மாடுளுக்கு நான்கு காம்பிற்கு பதிலாக சில சமயம் பிறவி கோளாறால் கூடுதலாக காம்பு காணப்படும். இது மாடு கெடேரியாக இருக்கும் போதே அறுவை சிகிச்சை செய்து அகற்றி விட வேண்டும். இல்லையேனில் பால் கறப்பதற்கு இடையூறாக இருக்கும்.
  4. காம்பில் அம்மை நோய்
    மடியிலும் காம்பிலும் ஏற்படும் அம்மையானது ஓரு வித வைரஸ் கிருமியால் ஏற்படுகிறது. மடியிலும் காம்பிலும் சிறு, சிறு நீர் நிறைந்த கொப்பளங்கள் போல் காட்சியளிக்கும். சிறிது நாட்களுக்கு பிறகு அந்த கொப்பளங்கள் உடைந்து நீர் வெளியேறும். அந்த இடத்தில் தோல் பொக்குகளாக காணப்படும் பிறகுஅந்த இடம் காய்ந்து தோல் உறியும். அம்மை வந்த மாடுகளிலிருந்து பாலை கன்றுக் குட்டிகளோ அல்லது நாமோ பருக கூடாது. மடியிலும் காம்பிலும் 1% KMnO4 கொண்டு கழுவ வேண்டும். வேப்பங் கொழுந்து மஞ்சள் அரைத்து போட வேண்டும்.
  5. காம்பழற்சி
    காம்பழற்சி வந்தால் பால் உரிமையாளர்களுக்கு மிகுந்த இழப்பு ஏற்படும். இது பெரும்பாலும் முதல் கன்றுகுட்டி ஈன்ற மாடுகளில் காணப்படும். காம்பில் புண் ஏற்பட்டால் அது ஆறுவதற்கு அதிக நாட்கள் எடுத்துக் கொள்ளும். இதுவே காம்பழற்சியாக மாறும். இந்தநிலையில் இருக்கும் மாடுகளில் பால் கறப்பது மிகவும் வலி உண்டாக்கும். அதனால் பால் கறப்பதை குறைத்துக் கொள்ள வேண்டும். Concentrate feed அளவு குறைத்து கொண்டால் பால் உற்பத்தி குறையும். ஆதலால் பால் கரப்பதையும் குறைத்து கொள்ளலாம்.

தகவல் : சு.கோகிலா, ச.கதிர்வேல், அறுவை சிகிச்சை மற்றும் ஊடுகதிரியக்க துறை, கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், திருநெல்வேலி– 627 358.

Spread the love