கோவை வேளாண் கல்லூரி மாணவிகள் விளக்க உரை
ஈரோடு மார்ச் 27
ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் வட்டாரம் சந்திராபுரம் கிராமத்தில், கறவை மாட்டின் உற்பத்தித் திறன் உயர்ந்ததாகவும், நிலையானதாகவும் இருக்க, சரியான கறவை மாட்டை தேர்வு செய்யும்முறைகள் குறித்து கோவை வேளாண் கல்லூரி மாணவிகள் விவசாயிகளுக்கு விளக்கமளித்தனர். இந்நிகழ்ச்சி நடராஜ் (மருதம் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் செயலாளர்) தலைமையில் நடந்தது. இந்நிகழ்வில் மாணவிகள் கூறியதாவது : “ஒரு மாட்டைத் தேர்ந்தெடுக்கும் போது அதன் கண்கள் பிரகாசமாகவும், மாடுகள் சுறுசுறுப்பாகவும் இருக்க வேண்டும் ,மூக்கின் நுனி ஈரமாகவே இருக்க வேண்டும். பால் அதிகம் தரக்கூடிய ஈத்துள்ள 2 முதல் 4ஆவது ஈத்தில் உள்ள மாடுகள் வாங்குதல் நலம். பாலைக் கறந்தவுடன் பால் மடி சுத்தமாக சுருங்கிட வேண்டும். நான்கு காம்புகள் சம அளவுகளாகவும், சம இடைவெளிகளுடனும் அமைந்திருக்க வேண்டும்’.