May 10, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

கறிக்கோழி கொள்முதல் விலை சரிவு

திருப்பூர், மே 3

கறிக்கோழி கொள்முதல் விலை, கிலோ ரூ.68 ஆக சரிவடைந்துள்ளது.

திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில் உள்ள கறிக்கோழி ஒருங்கிணைப்பு குழு(பி.சி.சி.,), கறிக்கோழி விலையை நிர்ணயிக்கிறது. கறிக்கோழி உற்பத்தியாளர்கள் கூறுகையில், கறிக்கோழி தீவனங்கள் விலை அதிகரித்து வருகிறது. இதனால், உற்பத்தியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளோம். தற்போது, கரோனா கட்டுப்பாடு காரணமாக, தமிழக அரசு, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில், இறைச்சி கடைகளை திறக்க கூடாது என கட்டுப்பாடு விதித்துள்ளது. இதனால், 30 சதவீதத்துக்கும் மேல் விற்பனை பாதிக்கப்படுகிறது. விற்பனை குறைந்து வருவதால், ஏப்ரல் மாதம் கிலோ ரூ.123 ஆக இருந்த கறிக்கோழி கொள்முதல் விலை, தற்போது, ரூ.68 ஆக குறைந்துள்ளது என்றனர்.

Spread the love