August 13, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

கறிவேப்பிலை, கொத்தமல்லி விலை உயர்வு

கரூர், மே 15

வரத்து குறைவால் கறிவேப்பிலை, கொத்தமல்லி விலை உயர்ந்துள்ளது.

கரூர் மாவட்டத்திற்கு, ஒட்டன் சத்திரம், பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து காய்கறிகள் கரூருக்கு லாரிகள், வேன்கள் மூலம் வருகின்றன. இந்நிலையில், கடந்த மாதம் கிலோ, ரூ.30க்கு விற்பனையான கத்தரிக்காய், ரூ.20க்கும், வெண்டைக்காய், ரூ.40 லிருந்து ரூ.25க்கும், கேரட், ரூ.60லிருந்து ரூ.40க்கும், தக்காளி, ரூ.20லிருந்து ரூ.10க்கும் குறைந்துள்ளது. அதேபோல், அனைத்து காய்கறிகளின் விலையும் கணிசமாக குறைந்துள்ளது. ஆனால், கறிவேப்பிலை, கொத்தமல்லி விலை உயர்ந்துள்ளது.

இது குறித்து, காய்கறி விற்பனையாளர்கள் கூறுகையில், ஊரடங்கு கட்டுபாடுகளால் வாகனங்கள் இயங்கவில்லை. இதனால், கடந்த மாதம், திண்டுக்கல், திருப்பூர் மாவட்டங்களில் கறிவேப்பிலை, கொத்தமல்லி தோட்டங்களில், விவசாய கூலி ஆட்கள் வராததால், களை எடுத்தல், பறித்தல் உள்ளிட்ட பணிகள் நடக்கவில்லை. இதனால், உற்பத்தி குறைந்துள்ளது. தற்போது, விவசாய விளை பொருட்களை கொண்டு செல்ல, வாகனங்கள் அதிகளவில் இயக்கப்பட்டாலும், கறிவேப்பிலை, கொத்தமல்லி தழைகளின் வரத்து குறைந்துள்ளது. இதனால், ரூ.20க்கு விற்பனையான கொத்தமல்லி, ரூ.40க்கும், ரூ.30க்கு விற்பனையான கறிவேப்பிலை, ரூ.50க்கும் என விலை உயர்ந்து விற்பனையாகிறது. தற்போது, விவசாய கூலி ஆட்கள் பணிக்கு வர துவங்கிய நிலையில், மழை பெய்து வருவதால் வரும் வாரங்களில் கறிவேப்பிலை, கொத்தமல்லி தழைகளின் விலை குறையும் என அவர்கள் தெரிவித்தனர்.

Spread the love