August 8, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

கலப்பை கிழங்கு/கண்வலிக் கிழங்கு

கலப்பை கிழங்கு காடுகளிலும், வேலிகளிலும், நிலப்பரப்பிலும் மருத்துவத்திற்காக பயன்படும் கொடி இனம். குவிந்த கைவிரல்கள் அமைப்பில், செந்நிற பூக்களையும், கண்வலிப்பு கலப்பை வடிவ கிழங்குகளையும், உடைய காந்தால், கார்த்திகை கிழங்கு பெயர்களால் வழங்கப்படும். கிழங்கே மருத்துவ பயன் உடையவை. உடல் தேற்றி உரம் ஆக்குதல், முறை வெப்பு அகற்றுதல், நீர் மலம் போக்குதல் ஆகிய மருத்துவ குணம் உடையது. பச்சையாக அரைத்து தின்றால் உயிர் போக்கும் நச்சுத்தன்மை வாய்ந்தது. கலப்பைக் கிழங்குடன், கருஞ்சீரகம், காட்டு சீரகம், கார்போகரிசி, கஸ்தூரி மஞ்சள் ஆகியவற்றை சம அளவு சேர்த்து நீரில் அரைத்து சொறி, சிரங்கு, ஊழல் படை முதலியவற்றுக்கு பூசி வைத்திருந்து குளித்து வர குணமாகும். கிழங்கை மெல்லிய பிள்ளைகளாக அறிந்து உலர வைத்து கோ நீரில் அல்லது உப்பிட்ட மோரில் ஏழு நாட்கள் இரவு தோறும் ஊற வைத்து பகலில் காய வைக்க சுத்தியாகும். இதில் ஒரு துண்டை பாம்பு கடித்தவர் மென்று தின்ன அரை மணி நேரத்தில் நஞ்சு இறங்கும். தேவைப்பட்டால் மீண்டும் ஒரு முறை கொடுக்கலாம்.

நன்றி : ASN சாமி அங்கக ஒருங்கிணைந்த விவசாய பண்ணை மற்றும் மூலிகை பண்ணை, ஆதனூர், திருவண்ணாமலை மாவட்டம், 94423 11505.

Spread the love