June 25, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் துவக்கம்

விருதுநகர், மே 23

கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டமானது 23.5.22 காலை 10 மணிக்கு முதலமைச்சர் துவக்கி வைத்தார்.
விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் வட்டாரத்தில் தெற்கு வெங்காநல்லூர் கிராமத்தில் நடுநிலை பள்ளியிலும், சமுசிகாபுரம் மில் கிருஷ்ணாபுரம் தொடக்க பள்ளியிலும் மற்றும் மேலபாட்ட கரிசல்குளம் M.P.K புதுப்பட்டி தொடக்க பள்ளியிலும் இந்நிகழ்ச்சிக்கான நேரடி ஒளிபரப்பு விவசாயிகளுக்கு காட்டப்பட்டது. இதில் தெற்கு வெங்கநல்லூர் கிராமத்திற்கு இராஐபாளையம் சட்டமன்ற உறுப்பினர் தங்கபாண்டியன் கலந்து கொண்டு விழாவில் சிறப்புரையாற்றி நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

அந்நிகழ்வில் வேளாண் துணை இயக்குநர் பத்மாவதி, வட்டார வளர்ச்சி அலுவலர் சிவகுமார், உதவி இயக்குநர் தோட்டக்கலை கலைவாணி, உதவி இயக்குநர் (கால்டைத் துறை), இராஜ ராஜேஸ்வரி, பஞ்சாயத்து தலைவர் இசக்கி ராஜா பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை, மருத்துவத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். வேளாண்மை மற்றும் தோட்டக்கலை சார்பில் கருத்துக்காட்சி வைக்கப்பட்டது. இச்சமயத்தில் இக்கிராமதத்தில் வேளாண்மை மற்றும் தோட்டக்கலை துறை சார்பாக பல்வேறு இடுப்பொருட்கள் வழங்கினர். வேளாண்மை துறையின் சார்பாக 100% மானியத்தில் பண்ணை குடும்பங்களுக்கு தலா 3 தென்னங்கன்றுகள், 75 சத மானியத்தில் வரப்பு பயிர் சாகுபடிக்கு ஒரு ஹெக்டேருக்கு 5 கிலோ உளுந்து பயறு, ரூ 750 மானியத்தில் கைத்தெளிப்பான் மற்றும் 50% மானியத்தில் விசைத்தெளிப்பான் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை இராஜபாளையம் உதவி இயக்குநர் (பொ) கு.தனலட்சுமி தலைமையிலான அலுவலர்கள் செய்தனர்.

Spread the love