August 8, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு

அரியலூர், ஆக. 3

அரியலூர் மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் பழனிசாமி, ஆண்டிமடம் வட்டாரத்தில் கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். கூவத்தூர் கிராமத்தில் வேளாண்மை பொறியியல் துறை மூலம் அமைக்கப்பட்ட பண்ணை குட்டைகளை ஆய்வு செய்தார். வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் மூலம் வழங்கப்பட்ட தென்னங்கன்றுகளின் பராமரிப்பு குறித்து விவசாயிகளுக்கு தொழில்நுட்ப ஆலோசனை வழங்கினார். மாநில வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் அங்கக வேளாண் இடுபொருள் உற்பத்தி மையம் அமைப்பதற்கான நெறிமுறைகள் குறித்து விவசாயிகளுக்கு விளக்கி பயனாளிகள் தேர்வு பணிகளை ஆய்வு செய்தார். ஆண்டிமடம் பஞ்சாயத்தில் ஆதிதிராவிட விவசாயிகளுக்கான போர்வெல் அமைக்கும் பணியினை ஆய்வு செய்தார். ஆய்வின்போது வேளாண்மை உதவி இயக்குனர் ராஜலட்சுமி, தோட்டக்கலை உதவி இயக்குனர் ஜீவா, உதவி பொறியாளர் சதாம் உசேன், வேளாண்மை மற்றும் தோட்டக்கலை உதவி அலுவலர்கள் ஆனந்த், திருநாவுக்கரசு, செல்வகுமார், அரங்கநாதன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Spread the love