August 8, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

கலைஞரின் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட பகுதியில் மாவட்ட ஆட்சியர் கள ஆய்வு

சேலம், ஆக. 4

சேலம் மாவட்டம், வாழப்பாடி வட்டாரம், தேக்கல்பட்டி கிராம ஊராட்சியில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட இனங்களை மாவட்ட ஆட்சியர் கார்மேகம் கள ஆய்வு மேற்கொண்டார்.

மேற்படி நிகழ்வில் கிராம பஞ்சாயத்து பகுதிக்கு என்ன தேவை என திட்டப்பகுதி பயனாளிகளிடம் கருத்து கேட்டறிந்தார்.

கோரிக்கைகளுக்கு ஏற்ப உடனுக்குடன் ஆவண செய்திட சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு உத்திரவிட்டார்.

மேற்படி நிகழ்வில் விதை சான்று துறை சார்பாக தொழில்நுட்ப ஆலோசனைகளை உதவி இயக்குநர் கௌதமன் எடுத்துரைத்தார்.

ஆட்சியர் தமது உரையில் சாகுபடிக்கு கொண்டு வரும் தரிசு தொகுப்பில் நீர் தேவை குறைவான பயிர்களான நெல்லி, கொய்யா, மக்காசோளம் போன்ற பயிர்களை சாகுபடி செய்து தரிசு தரும் பரிசு ஆக மாற்ற வேண்டும் என கூறினார்.

நிகழ்வில் மாவட்ட ஊரக வளர்ச்சி கூடுதல் இயக்குநர் பாலசந்திரன்,
வேளாண் இணை இயக்குநர் பாலையா, மாவட்ட மகளிர் திட்ட இயக்குநர் செல்வம்,
விதை ஆய்வு துணை இயக்குநர் சண்முகம், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் செல்வமணி, தோட்டக்கலை துணை இயக்குனர் யமுனா மற்றும் பல்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

நிகழ்வுக்கான ஏற்பாடுகளை வட்டார உதவி இயக்குநர் மணிமேகலா தேவி தலைமையிலான அலுவலர் குழு செய்திருந்தனர்.

இத்தகவலை, கௌதமன்.தி, உதவி இயக்குநர், சேலம் மாவட்டம் தெரிவித்தார்.

Spread the love