August 14, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

கலைஞரின் வேளாண் வளர்ச்சி கிராமத்தில் அட்மா பயிற்சி

ஈரோடு, ஜூலை 14

ஈரோடு மாவட்டம், அம்மாபேட்டை வட்டாரத்தில் உள்ள கொமராயனூர் கிராமம் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ளது. கொமராயனூர் கிராமத்தில் உள்ள விவசாயிகளுக்கு அட்மா திட்டத்தில் தீவன உற்பத்தி விவசாயிகள் பயிற்சி நடைபெற்றது. இப்பயிற்சிக்கு அம்மாபேட்டை வேளாண்மை உதவி இயக்குநர் ம.கனிமொழி கலந்து கொண்டு வேளாண்மைத்துறை சார்ந்த மானிய திட்டங்கள் மற்றும் உயிர் உரங்கள் பயன்படுத்தும் முறைகள் பற்றி எடுத்துரைத்தார். மேலும் இப்பயிற்சியில் கலந்து கொண்ட விதை சான்று மற்றும் அங்கக சான்று உதவி இயக்குநர் மோகனசுந்தரம், புதிய பயிர் ரகங்களில் விதைப்பண்ணை அமைத்தல் மற்றும் பயிர் இரகங்கள் தேர்வு செய்யப்படும் முறைகள், இயற்கை வேளாண்மை மற்றும் அங்ககசான்று பதிவு செய்யும் நடைமுறைகள் பற்றி விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தார். இப்பயிற்சியில் 40க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். இப்பயிற்சியில் உதவி வேளாண்மை அலுவலர் கயல்விழி கலந்து கொண்டு விவசாயிகளுக்கு நன்றி தெரிவித்தார். அம்மாபேட்டை தொழில் நுட்ப மேலாளர் பிரபாகரன், தியாகராஜன் ஆகியோர் இப்பயிற்சிக்கான ஏற்பாட்டினை செய்திருந்தனர். மேலும் இப்பயிற்சியில் விதை சான்று அலுவலர் தமிழரசு மற்றும் வேளாண்மை துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Spread the love