August 8, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

கலைஞர் திட்ட கிராமத்தில் விதைச்சான்று பயிற்சி

சிவகங்கை, ஆக. 2

சிவகங்கை மாவட்டம், எஸ்.புதூர் வட்டாரம், கலைஞர் திட்ட கிராமம் மின்னமலை பட்டியில் விதைச்சான்றுத் துறை மூலம் விதைப்பண்ணை அமைத்தல் மற்றும் அங்கக சான்று தொடர்பாக பயிற்சி அளிக்கப்பட்டு, சிவகங்கை விதைச்சான்று மற்றும் அங்ககச் சான்று உதவி இயக்குநர் ம.மதுரைசாமி கலந்து கொண்டு அங்கக வேளாண்மை, அங்கக பொருட்களான மண்புழு உரம், பஞ்ச காவ்யா, அரை கரைசல் தயாரிக்கும் முறைகள் மற்றும் அங்கக சான்று பெறும் முறைகள் குறித்து எடுத்துக் கூறினார்.

சிவகங்கை மாவட்ட விதைச்சான்று அலுவலர் யோகேஷ்வரன், விதைச்சான்று நடைமுறைகள் குறித்து விளக்கி கூறி, உளுந்து பயிரில் அதிக அளவில் விதைப்பண்ணை அமைக்குமாறு விவசாயிகளிடம் கூறினார். எஸ்.புதூர் தோட்டக்கலை அலுவலர் கௌசல்யா கலந்து கொண்டு தோட்டக்கலை திட்டங்கள் குறித்து எடுத்துக் கூறினார். உதவி விதை அலுவலர் பாலமுருகன் கலந்து கொண்டு பயிர் உர விதை நேர்த்தி செயல் விளக்கம் செய்து காண்பித்தார். கலைஞர் திட்ட மின்னமலை பட்டி கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் பெருந்திரளாக கலந்து கொண்டனர். வட்டார தொழில் நுட்ப மேலாளர் ஸ்ரீரெங்கசெல்வி மற்றும் முன்னோடி விவசாயி பாண்டி ஆகியோர் பயிற்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

Spread the love