June 29, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

களைச்செடியில் கண்கவரும் பர்னிச்சர் பொருட்கள் தயாரிப்பு

ஊட்டி, கொடைக்கானல், முதுமலை வனப்பகுதியில் காணப்படும் உன்னிசெடி என்று அழைக்கப்படும் லேண்டானா கேமிரா என்ற களைச் செடிகள்1800ம் ஆண்டில் ஆங்கிலேயர்களால் அழகு செடியாக அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் பூக்கள் பார்ப்பதற்காக அழகாக இருக்கும். வெர்பினேசி தாவர குடும்பத்தை சார்ந்தது பகுதி ஓட்டுண்ணி செடியான இந்த தாவரம் சந்தன மரத்திற்கு மிகவும் சிறந்த ஒம்புயிர்த் தாவரமாகும். இத்தகைய தன்மை கொண்ட இந்த செடி வனப்பகுதியில் அதிகரித்து வருகின்றன. இதனால் வனவிலங்குகளின் தீவன தாவரங்கள் அழிந்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்க செய்தியாகும். பழங்குடியின இளைஞர்கள் இந்த தாவரத்தை பிடுங்கி, சுடு நீரில், வேக வைத்து அதன் தோலையை நீக்கி, வெயில் காயவைத்து பின் முங்கில் மாதிரி வளைத்து சேர், சோபா, உள்ளிட்ட பொருட்கள் தயாரித்து விற்பனை செய்கின்றனர். மக்கள், குறிப்பாக இளைஞர்கள் மனது வைத்தால் எந்த ஒரு பொருளும் விணாகுவதில்லை. இந்த செடிகளை அழிக்க வனத்துறையினர் முயற்சி எடுத்து வருகின்றனர். இதே சமயத்தில் கண் கவரும் பொருட்களும் தயாரிக்கப்படுவது குறிப்பிடத்தக்க அம்சமாகும். மாற்றி யோசித்தால் இந்த உலகில் எந்த ஒரு பொருட்களும் வீணாகாது.

தகவல் : அக்ரி சு.சந்திர சேகரன், வேளாண் ஆலோசகர், அருப்புக்கோட்டை.

Spread the love