August 15, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்ட விவசாயிகளுக்கு வானிலை சார்ந்த வேளாண் ஆலோசனைகள்

காஞ்சிபுரம், ஜூலை 12

காஞ்சிபுரம், வேளாண் அறிவியல் நிலையம், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் மற்றும் இந்திய வானிலைத் துறை இணைந்து வழங்கும் வானிலை சார்ந்த வேளாண் ஆலோசனைகளை (13.07.2022 முதல் 17.07.2022, 8.30 மணி வரை) பின்வருமாறு தெரிவித்துள்ளது.

    13.7.22 14.7.22 15.7.22 16.7.22 17.7.22    

மழை (மி.மீ.) 03 02 00 00 08
அ.வெப்பநிலை 35 35 35 35 35
கு. வெப்பநிலை 26 26 26 26 26
ஒப்பு ஈரப்பதம் I 70 70 70 70 70
ஒப்பு ஈரப்பதம் II 60 60 60 60 60
காற்றின் வேகம் (கி.மீ/மணி) 10 10 10 10 10
காற்றின் திசை தென்மேற்கு தென்மேற்கு தென்மேற்கு தென்மேற்கு மேற்கு தென்மேற்கு
மேக மூட்டம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படலாம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படலாம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படலாம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படலாம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படலாம்

வானிலை முன்னறிவிப்பு தகவல்கள்
காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டதைப் பொறுத்தவரையில், அடுத்த ஐந்து நாட்களில் 13.7.22, 14.7.22 மற்றும் 17.7.22 ஆகிய மூன்று நாட்களுக்கு லேசான மழைக்கு வாய்ப்புள்ளது, வெப்பநிலை அதிகபட்சமாக 35 டிகிரி செல்சியஸ் வரையும் குறைந்தபட்சமாக 26 டிகிரி செல்சியஸ் வரையும் பதிவாக்கலாம். காற்றின் ஈரப்பதமானது 60-70% வரை பதிவாகலாம், மேலும் காற்றானது மணிக்கு 10 கி.மீ. வேகத்தில் தென்மேற்கு – மேற்கு தென்மேற்கு திசையில் வீசலாம். வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படலாம்.

பொது அறிவிப்பு
வரும் 17.7.22 – 23.7.22 தமிழ்நாடு மற்றும் புதுவையைப் பொறுத்தவரையில் மழையானது இயல்பை விட குறைவாகவும், குறைந்த மற்றும் அதிகபட்ச வெப்பநிலை இயல்பான அளவு பதிவாகலாம்.

வானிலை சார்ந்த வேளாண் ஆலோசனைகள்

பொது அறிவிப்பு
லேசான மழை எதிர்பார்க்கப்படுவதினால் விவசாயிகள் பயிர்களுக்கு பாசனம் செய்வதினை தள்ளி வைக்கலாம். மேலும் மழை நாட்களில் பூச்சி, பூஞ்சாண மற்றும் களைக்கொல்லிகள் தெளிப்பதினை தவிர்க்கலாம்.

குறுந்செய்தி
விவசாயிகள் கோழிகளுக்கு அருகிலுள்ள கால்நடை மருந்தகத்தில் வெள்ளை கழிச்சில் நோய்க்கான தடுப்பூசியை அளிக்கலாம்.

நெல் பயிர் தூர்கட்டும் பருவத்தில் வயலில் இலை சுருட்டுப்புழு தாக்க வாய்ப்புள்ளதால், விவசாயிகள் பூச்சி தாக்க அறிகுறிகள் தென்படுமாயின் ஹெக்டருக்கு குளோரோடேரினிலிபுருள் 150 கிராம் அளவில் தெளித்து கட்டுப்படுத்தலாம்.

நிலக்கடலை பயிரை முன் பருவ இலைப்புள்ளி நோய் தாக்க வாய்ப்புள்ளதால், விவசாயிகள் நோயினை மேலாண்மை செய்ய ஒரு ஏக்கருக்கு குளோரோதலோனில் 400 கிராம் என்ற அளவில் தெளிக்கலாம்.

காய்க்கும் பருவ மிளகாய் பயிரை பேன் பூச்சிகள் தாக்க வாய்ப்புள்ளதால், விவசாயிகள் பூச்சியை கட்டுப்படுத்த எமாமெக்டின் பென்ஜொவேட் 5 % SG பூச்சிக்கொல்லி மருந்தை லிட்டருக்கு 4 கிராம் அளவில் தெளிக்கலாம்.

கத்தரி நாற்றங்காலில் நிலவும் வானிலையால் அழுகல் நோயை ஏற்படுத்தலாம் என்பதால் அதனை கட்டுப்படுத்த சூடோமோனாஸ் ஃப்ளோரசன்ஸை 2.5 கிலோ என்ற அளவில் 50 கிலோ தொழு உரத்துடன் கலந்து இடலாம் அல்லது நாற்றங்காலில் மேட்டுப்பாத்திகள் அமைத்து அதிகப்படியான நீர் தேங்குவதை தவிர்க்கலாம்.

கால்நடைகளைப் பொறுத்தமட்டில், விவசாயிகள் கறவை மாடுகளுக்கு அடர் தீவனம் / பசுந்தீவனம் மற்றும் உலர் தீவனம் ஆகியவற்றை சரிவிகித அளவில் அளித்தல் அவசியம். ஐந்து லிட்டர் பால் தரும் மாட்டிற்கு 2.5 கிலோ அடர் தீவனம் / 20-25 கிலோ பசுந்தீவனம் மற்றும் 5 கிலோ உலர் தீவனம் அளிக்கலாம்.

வெள்ளாடுகளின் இனப்பெருக்கத் திறனை மேம்படுத்த விவசாயிகள் இந்தப் பருவத்தில் இனப்பெருக்கம் செய்யும் கிடாய்களுக்கு சத்தான சரிவிகித தீவனம் அளிக்கலாம்.

கோழிகளுக்கு பி-காம்ப்லெக்ஸ் திரவம் / வைட்டமின் சி திரவத்தினை குடிநீருடன் கலந்து அளிப்பதால் வளர்ச்சி மற்றும் உற்பத்தியை மேன்படுத்தலாம். விவசாயிகள் கோழி குஞ்சுகளுக்கு போதிய அளவு வெப்ப ஊட்டிகள் அமைத்து குஞ்சிகள் இறப்பினை தவிர்க்கலாம். விவசாயிகள் கோழிகளுக்கு அருகிலுள்ள கால்நடை மருதகத்தில் வெள்ளை கழிச்சில் நோய்க்கான தடுப்பூசியை அளிக்கலாம்.

உள்நாட்டு மீன் வளர்ப்பில், வரும் ஐந்து நாட்களுக்கு வானம் பெரும்பாலும் மேகமூட்டத்துடன் காணப்பட வாய்ப்புள்ளதால் மீன் வளர்ப்பு குளங்களில் நுன் பாசிகளின் உற்பத்தியானது பெருக்கம்மடையாமல் நிலைத்து காணப்படும். எனவே மீன்/இறால் குளங்களில் வழக்கமான நீர் மாற்று விகிதத்தை 50% சதவீதமாக குறைப்பதன் மூலம் நுன் பாசிகளின் அடர்த்தி குறையாமல் பாதுகாக்கலாம். நிலவ இருக்கும் குறைந்த பட்ச வெப்பநிலையை கருத்தில் கொண்டு மீன் வளர்ப்பு விவசாயிகள் காலை தீவனத்தை ஒரு மணி நேரம் தாமதப்படுத்தியும் மாலை நேர தீவனத்தினை ஒரு மணி நேரம் முன்னரே அளிக்கலாம். மேலும் தீவனம் அளிக்கும் விகிதத்தினை மீன் தீவன தேவைக்கு ஏற்ப மாற்றிக்கொல்லாம்.

பொது மீன்களை பொறுத்தமட்டில், விவசாயிகள் மழை முன்னறிவிப்பை கருத்தில்கொண்டு மீன் மற்றும் இறால் வளர்ப்பு குளங்களில் நோய் ஏற்படுவதை தவிர்க்க நீரின் தரத்தின் தன்மையை பாதுகாக்கலாம். பாசிகளின் அடர்த்தி/ஒளி உட்புக தன்மையை 30-45 சென்டி மீட்டர் வரை பராமரிக்கலாம். மேலும் மீன் தீவனத்துடன் 4-6% வரை பூண்டு பசையை கலந்து அளிப்பதால் மீன்களின் ஆரோக்கியத்தினை பாதுகாக்கலாம்.

இந்த வானிலை சார்ந்த வேளாண் ஆலோசனை காஞ்சிபுரம், வேளாண்மை அறிவியல் நிலையம் தொழில்நுட்ப வல்லுநர்களின் ஓப்புதலோடு வெளியிடப்படுகிறது.

தகவல் : முனைவர் சு.கங்காதரன், முனைவர் மா.சித்தார்த், முனைவர் மா.விமலாராணி, முனைவர் காயத்திரி சுப்பையா, முனைவர் க.தேவகி, முனைவர் கி.சிவகுமார், மா.ராஜேஸ்கண்ணன், வேளாண்மை அறிவியல் நிலையம், காட்டுப்பாக்கம், செங்கல்பட்டு. 99405 42371, 94428 38015, 85080 59752.

Spread the love