August 15, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

காஞ்சிபுரம் & செங்கல்பட்டு மாவட்ட வானிலை சார்ந்த வேளாண் ஆலோசனைகள்

காஞ்சிபுரம், ஜூலை 20

தமிழ் நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் மற்றும் இந்திய வானிலைத் துறை இணைந்து வழங்கும் காஞ்சிபுரம் & செங்கல்பட்டு மாவட்ட வானிலை சார்ந்த வேளாண் ஆலோசனைகளை, வேளாண் அறிவியல் நிலையம், காஞ்சிபுரம் பின்வருமாறு தெரிவித்துள்ளது.

வானிலை முன்னறிவிப்பு (21.7.22 முதல் 24.7.22, 8.30 மணி வரை)

        21.7.22 22.7.22 23.7.22 24.7.22    

மழை (மி.மீ.) 04 03 05 05
அ.வெப்பநிலை 33 34 34 34
கு. வெப்பநிலை 26 26 27 27
ஒப்புஈரப்பதம் I 70 70 70 70
ஒப்புஈரப்பதம் II 50 50 50 50
காற்றின்வேகம் (கி.மீ/மணி) 08 08 08 08
காற்றின் திசை மேற்கு
மேக மூட்டம் பெரும்பாலும் மேகமூட்டத்துடன் காணப்படலாம்

வானிலை முன்னறிவிப்பு தகவல்கள்

காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தைப் பொறுத்தவரையில், அடுத்த நான்கு நாட்களுக்கும் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. வெப்பநிலை அதிகபட்சமாக 33-34 டிகிரி செல்சியஸ் வரையும் குறைந்தபட்சமாக 26-27 டிகிரி செல்சியஸ் வரையும் பதிவாக்கலாம். காற்றின் ஈரப்பதமானது 40-70% வரை பதிவாகலாம், மேலும் காற்றானது மணிக்கு 06-08 கி.மீ. வேகத்தில் மேற்கு திசையில் வீசலாம். வானம் பெரும்பாலும் மேகமூட்டத்துடன் காணப்படலாம்.

பொது அறிவிப்பு வரும் 24.7.22 – 30.7.22 வரை தமிழ்நாடு மற்றும் புதுவையைப் பொறுத்தவரையில் மழையானது இயல்பை விட அதிகமாகவும், குறைந்த மற்றும் அதிகபட்ச வெப்பநிலை இயல்பான அளவு பதிவாகலாம்.

வானிலை சர்ந்த வேளாண் ஆலோசனைகள்

பயிர் பருவம் பொது அறிவிப்பு
மழை மற்றும் வானம் மேகமூட்டத்துடன் காணப்படலாம் என்பதால் பயிர்களில் சாரு உறிஞ்சும் பூச்சிகள் தாக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதால் விவசாயிகள் பூச்சி தாக்க அறிகுறிகள் தென்படுமாயின் விவசாயிகள் போதிய பயிர் பாதுகாப்பு நடவடிக்கை மேற்க்கொள்ளவும்.

குறுந்செய்தி
மீன் தீவனம் மற்றும் மீன் தீவனக்கலவைகளை பூஞ்சை தாக்கத்திலிருந்து தவிர்க்க நல்ல காற்றோட்டமான மற்றும் சுகாதாரமான இடங்களில் சேமித்து வைக்கலாம். மேலும் மழைக்காலங்களில் அதிக நாட்கள் தீவனங்களை சேமித்து வைப்பதினை தவிர்க்கலாம்.

நெல் தூர்கட்டும் பருவத்தில், பயிரில் தண்டு துளைப்பான் பூச்சிகள் தாக்க வாய்ப்புள்ளதால் விவசாயிகள் பூச்சியை கட்டுப்படுத்த ஹெக்டருக்கு குளோரோடேரினிலிபுருள் 150 கிராம் என்ற அளவில் தெளிக்கலாம்.

காய்க்கும் பருவ வெண்டை பயிரை காய்ப்புழுகள் தாக்க வாய்ப்புள்ளதால் விவசாயிகள் பூச்சியை கட்டுப்படுத்த ஒரு ஏக்கருக்கு 6 இனக்கவர்ச்சிப் பொறியை அமைக்கலாம்.

காய்க்கும் பருவ கத்திரி பயிரை ஹட்டா / புள்ளி வண்டுகள் தாக்க வாய்ப்புள்ளதால் விவசாயிகள் வண்டு தாக்க அறிகுறிகளான பச்சையம் சுரண்டப்பட்டு சல்லடை போல் காணப்படுமானால் கார்பரில் 50 WP @ 3கிராம்/லிட்டர் நீரில் கலந்து தெளிக்கலாம்.

பூக்கும் காய்க்கும் மல்லிகை பூக்களை மொக்கு துளைப்பான் பூச்சிகள் தாக்க வாய்ப்புள்ளதால் விவசாயிகள் தோட்டக்கலை அலுவலர்களின் பரிந்துரை அடிப்படையில் பயிர் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்க்கொள்ளலாம்.

கொடிவகை காய்கறிகள் வளர்ச்சி பருவத்தில், பயிரில் இலைகளை துளைத்து வெந்நிற கோடுகளை ஏற்படுத்தும் இலைத்துளைப்பான் பூச்சிகள் தாக்க வாய்ப்புள்ளதால் விவசாயிகள் 5% வேப்பங்கொட்டை வடிநீர் தெளிக்கலாம்.

கால்நடைகளைப் பொறுத்தமட்டில், குறிப்பாக, கறவை மாடுகள், விவசாயிகள் கறவை மாடுகளுக்கு குடல் புழு மற்றும் ஒட்டுண்ணி நீக்கம் செய்வதினால் ஓட்டுண்ணி தாக்கத்தினை தவிர்க்கலாம். விவசாயிகள் கன்றுகளுக்கு தானுவாஸ் தாது உப்பு கட்டிகளை அளிப்பதினால் மண் தின்பதை தவிர்க்கலாம்.

செம்மறி மற்றும் வெள்ளாடுகளை பொறுத்தமட்டில், ஆடுகளில் தாது உப்பு குறைபாட்டினை சரிசெய்ய தனுவாஸ் தாது உப்பு கட்டிகளை கொட்டகைகளில் கட்டிவைக்கலாம். மழையினால் முளைத்த புதிய புற்களில் விவசாயிகள் ஆடுகளை மேச்சலுக்கு அனுப்புவதினை தவிர்க்கலாம்

கோழி விவசாயிகள், கோழிக்கொட்டகைகளில் ஈகளை கட்டுப்படுத்த பேஸ்ட்ரோ பிளஸ் கருவியை பயன்படுத்தலாம். விவசாயிகள் கோழிகளுக்கு அருகிலுள்ள கால்நடை மருந்தகத்தில் வெள்ளை கழிச்சில் நோய்க்கான தடுப்பூசியை அளிக்கலாம்.

உள்நாட்டு மீன் வளர்ப்பு பண்ணையாளர்கள் மீன் குளத்தினை சுற்றி சுத்தமாகவும் கரையை நீர் மட்டத்திலிருந்து 2 மீட்டர் வரை சுத்தமாகவும் வைத்தல் அவசியம். மேலும் மீன் குளங்களில் ஒரு அடி விட்டம் உள்ள சிமெண்ட் குழாய்களில் வலைகளை பொருத்தி நீர் வெளியேறும் வண்ணம் அமைப்பதினால் அதிகப்படியான நீர் வெளியேறுவதுடன் மீன் குஞ்சுகள் வழித்தோடும் நீரில் செல்வதினை தவிர்க்கலாம். மழை நீர் வடிகால் குளங்களில் களைமீன்கள் மற்றும் இதர மீன்கள் கலந்து வராமலிருக்க நீர்புகு மடைகளில் 5 மி.மீ முதல் 15 மி.மீ வரை அளவுள்ள வலைகளை பொருத்தலாம். மழைக்காலங்களில் தீவனங்களை தேவைக்கு ஏற்ப தீவன வளைப்பைகள் மூலம் வழங்கலாம்.

மீன்களில் ஏற்படும் நோய் தொற்றினை அறிய விவசாயிகள் காலை அல்லது மாலை நேரங்களில் மீன் குளங்களில் மீன் மாதிரிகளை சேமித்து நோய்க்கான அறிகுறிகளை ஆராய்ந்து தக்க மேலாண்மை முறைகளை கையாளலாம். வரும் ஐந்து நாட்களுக்கு வெப்பநிலை குறைந்து காணப்படலாம் என்பதால் மீன் தீவனங்களை காலை வேளையில் ஒரு மணி நேரத்திற்கு மிகாமல் தாமதப்படுத்தி அளிக்கலாம். பண்ணை குட்டைகைகளில் மீன் வளர்க்கும் விவசாயிகள் மழைக்காலங்களில் மழை நீருடன் அடித்து வரும் குப்பை கூளங்களை தவிர்க்க முதலில் 5 மி.மீ மற்றும் 10 மி.மீ வலை தடுப்புகளையும் அடுத்து 1 மி.மீ மற்றும் 3 மி.மீ வலை தடுப்புகளை அமைக்கலாம்.

தகவல் : முனைவர் சு.கங்காதரன், முனைவர் மா.சித்தார்த், முனைவர் மா.விமலாராணி, முனைவர் காயத்திரி சுப்பையா, முனைவர் க.தேவகி, முனைவர் கி.சிவகுமார், மா.ராஜேஸ்கண்ணன், வேளாண்மை அறிவியல் நிலையம், காட்டுப்பாக்கம், செங்கல்பட்டு. 99405 42371, 94428 38015, 85080 59752.

Spread the love