May 17, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட வானிலை சார்ந்த வேளாண் ஆலோசனைகள்

காஞ்சிபுரம், மார்ச் 9

தமிழ் நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் மற்றும் இந்திய வானிலைத் துறை இணைந்து வழங்கும் காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட வானிலை சார்ந்த வேளாண் ஆலோசனைகள்

வானிலை முன்னறிவிப்பு 10.03.22 முதல் 13.03.22, 8.30 மணி வரையிலானது.

        10.03.22    11.03.22    12.03.22    13.03.22

மழை (மி.மீ.) 00 00 00 00
அ.வெப்பநிலை 32 33 33 33
கு. வெப்பநிலை 23 23 23 23
ஒப்புஈரப்பதம் I 75 75 75 75
ஒப்புஈரப்பதம் II 55 55 55 55
காற்றின்வேகம் (கி.மீ/மணி) 06 06 06 06
காற்றின் திசை கிழக்கு வடகிழக்கு
மேக மூட்டம் தெளிவாக காணப்படும்

வானிலை முன்னறிவிப்பு தகவல்கள் : அடுத்து வரும் நான்கு நாட்களுக்கும் மழைக்கு வாய்ப்பின்றி வறண்ட வானிலையே நிலவ வாய்ப்புள்ளது. வெப்பநிலை அதிகபட்சமாக 32-33 டிகிரி செல்சியஸ் வரையும் குறைந்தபட்சமாக 23 டிகிரி செல்சியஸ் வரையும் பதிவாக்கலாம். மேலும் காற்றானது மணிக்கு 06 கி.மீ. வேகத்தில் கிழக்கு வடகிழக்கு திசையில் வீசலாம். காற்றின் ஈரப்பதமானது 55-75% வரை பதிவாக்கலாம். பகலில் வானம் தெளிவாக காணப்படும்.

பொது அறிவிப்பு : வரும் 13.03.2022 – 19.03.2022 தமிழ் நாடு மற்றும் புதுவையை பொறுத்தவரையில் மழை மற்றும் குறைந்தபட்ச & அதிகபட்ச வெப்பநிலை இயல்பான அளவு பதிவாக்கலாம்.

வானிலை சர்ந்த வேளாண் ஆலோசனைகள்

பொது அறிவிப்பு : மழைக்கு வாய்ப்பில்லை என்பதினால் விவசாயிகள் மண்ணின் ஈரப்பத்தினை அறிந்து பயிர்களுக்கு பாசனம் செய்யலாம்.

குறுந்செய்தி : நெல் வயலில் இலை சுருட்டுப்புழு தாக்க வாய்ப்புள்ளதால் விவசாயிகள் பூச்சி தாக்க அறிகுறிகள் தென்படுமாயின் ஹக்டருக்கு குளோரோடேரினிலிபுருள் 150 கிராம் அளவில் தெளித்து கட்டுப்படுத்தலாம்.

தூர் கட்டும் மற்றும் கதிர் வரும் பருவம் நெல் : நெல் வயலில் இலை சுருட்டுப்புழு தாக்க வாய்ப்புள்ளதால் விவசாயிகள் பூச்சி தாக்க அறிகுறிகள் தென்படுமாயின் ஹக்டருக்கு குளோரோடேரினிலிபுருள் 150 கிராம் அளவில் தெளித்து கட்டுப்படுத்தலாம்.

முதிர்ச்சி பருவம் பயறு வகை : உளுந்தில் காய்த் துளைப்பான் தாக்க வாய்ப்புள்ளதால் விவசாயிகள் பூச்சியை கட்டுப்படுத்த டைகுளோர்வாஸ் 625 மி.லி/ஹ என்ற அளவில் தெளிக்கலாம்.

முதிர்ச்சி பருவம் எள் : எள் பயிரில் காய்த் துளைப்பான் தாக்க வாய்ப்புள்ளதால் விவசாயிகள் பூச்சியை கட்டுப்படுத்த 5 % வேப்பங் கொட்டை சாறு தெளிக்கலாம்.

மா மரம் : மா மரத்தில் இலை மற்றும் பூக்களை பிணைக்கும் புழுக்கள் மெல்லிய நூலிழையினால் அடுத்தடுத்த இலைகளை பிணைத்துக் கொண்டு உள்ளிருந்து பச்சையத்தை சுரண்டி உண்ண வாய்ப்புள்ளதால் விவசாயிகள் பூச்சிக்கு எதிரான இயற்கை எதிரிகளை வயலில் பெருக்கமடைய செய்யலாம்.

கறவை மாடுகள் : விவசாயிகள் கால்நடைகளுக்கு 30-50 கிராம் தாதுப்பை அடர்த்தீவனத்துடன் கலந்தளிப்பதால் பாலில் கொழுப்பு சத்தினை அதிகரிக்கலாம்.

செம்மறி மற்றும் வெள்ளாடு : விவசாயிகள் ஆட்டுக்கொட்டகையில் தாது உப்பு கட்டிகளை கட்டிவைப்பதன் ஆடுகளில் வளர்ச்சி விகிதத்தினை அதிகரிக்கலாம். விவசாயிகள் ஆடுகளில் ஏற்படும் கழிச்சல் நோயினை தவிர்க்க தேவையான எதிர்ப்பு மருந்துகளை கால்நடை மருத்துவரின் பரிந்துரையின் அடிப்படையில் அளிக்கலாம்.

வான்கோழி : வான்கோழிகளுக்கு விவசாயிகள் அம்மை நோய்க்கான தடுப்பூசியை அருகிலுள்ள கால்நடை மருந்தகத்தினை அணுகி அளிக்கலாம்.

உள்நாட்டு மீன் வளர்ப்பு : வரும் ஐந்து நாட்களுக்கு வெப்பநிலை குறைந்து காணப்படலாம் என்பதால் மீன் தீவனங்களை காலை வேளையில் ஒரு மணி நேரத்திற்கு மிகாமல் தாமதப்படுத்தி அளிக்கலாம். வரும் நான்கு நாட்களுக்கும் மழை மற்றும் காற்றின் ஈரப்பதம் அதிகரித்து காணப்படலாம் என்பதால் மீன்/இறால் தீவனங்களை உலர்த்த மற்றும் காற்றோட்டமான இடத்தில் சேமித்து வைப்பதன் மூலம் பூஞ்சைகள் தாக்கத்திலிருந்து பாதுகாக்கலாம். விவசாயிகள் மீன் குளங்களில் ஒட்டுண்ணி தொற்றை தவிர்க்க 1-2 வார இடைவெளியில் எக்டேருக்கு 100-200 கிலோ, சுட்ட/நீர்த்த சுண்ணாப்பினை நீரின் கார அமிலத்தன்மைக்கேற்றவாறு (pH) அளிக்கலாம்.

மீன் வளம் : மீன்களில் ஏற்படும் நோய் தொற்றினை அறிய விவசாயிகள் காலை அல்லது மாலை நேரங்களில் மீன் குளங்களில் மீன் மாதிரிகளை சேமித்து நோய்க்கான அறிகுறிகளை ஆராய்ந்து தக்க மேலாண்மை முறைகளை கையாளலாம். பாசிகளின் அடர்த்தி/ஒளி உட்புக தன்மையை 30-45 சென்டி மீட்டர் வரை பராமரிக்கலாம். மேலும் மீன் தீவனத்துடன் 4-6% வரை பூண்டு பசையை கலந்து அளிப்பதால் மீன்களின் ஆரோக்கியத்தினை பாதுகாக்கலாம்.

தகவல் : முனைவர் சு.கங்காதரன், முனைவர் மா.சித்தார்த், முனைவர் மா.விமலாராணி, முனைவர் தி.செல்வராஜ், முனைவர் காயத்திரி சுப்பையா, முனைவர் க.தேவகி, முனைவர் கி.சிவகுமார், மா.ராஜேஸ்கண்ணன், வேளாண்மை அறிவியல் நிலையம், காட்டுப்பாக்கம், செங்கல்பட்டு. 99405 42371, 94428 38015, 85080 59752.

Spread the love