விவசாயத்தை விதைப்பு முதல் அறுவடை வரை பல்வேறு காரணிகள் பாதிப்புக்குள்ளாகி வருகின்றன. அவற்றில் மிகவும் முக்கியமானது, காட்டு விலங்குகள். கடந்த இருபது ஆண்டுகளாக இல்லாத தொந்தரவு தற்போது அதிக பிரச்சினையாக விவசாயிகள் மத்தியில் பேசப்படுகின்றன. குறிப்பாக இந்தியா முழுவதுமாக இந்த பிரச்சனை விவாதிக்கப்பட்டு தடுப்பு முறை குறித்து ஆலோசிக்க பட்டு வருகின்றது.
முக்கியமான காட்டு விலங்குகள் யானை, காட்டு பன்றி, முள்ளம் பன்றி, காட்டு மாடுகள், லங்கூர் குரங்குகள், மலபார் அணில், மயில், முயல், எலி போன்ற 12 வகையான விலங்குகளால் தொந்தரவு என வரையறுக்கப்பட்டு, அவற்றை சுட்டு கொல்ல அனுமதிக்க வேண்டுமென பல்வேறு வகையான விவசாய அமைப்புகள் தொடர்ந்து போராடி வருகின்றன. பொதுவாக ஒரு வகை விலங்கினங்களின் எண்ணிக்கை கூடினால், அந்த விலங்கினத்தை கட்டுப்படுத்த கூடிய, அல்லது இரையாக உண்ணக்கூடிய விலங்கினத்தின் எண்ணிக்கை குறைவாகஇருக்கும். எடுத்துக்காட்டாக மயில்களின் நடமாட்டம் அதிகமாக இருப்பதால் அவற்றின் முட்டைகளை உணவாக உண்ணக்கூடிய நரிகளின் நடமாட்டம் மிகவும் குறைவாக உள்ளது. இதனால் கடந்த பத்து ஆண்டுகளாக மயில்களின் தொந்தரவு. விதைப்பு முதல் அறுவடை வரை சேதம் உண்டாக்குகிறது. இதற்கு முக்கிய காரணம் விலங்குகளின் உணவு சங்கிலி தடைபட்டு உள்ளது. மேலும் மனிதர்களும் மிகவும் முக்கியமான காரணமாகும். காடுகளை அழித்து, ரிசார்ட்ஸ்கள் அமைத்து வன விலங்குகள் நடமாடும் பாதைகளை மறைக்கும் செயல்களை செய்து வருகின்றனர்.
இந்த உலகில் மனிதர்கள் எப்படி வாழ உரிமை உள்ளதோ அதுபோல விலங்குகளுக்கும் உரிமை உள்ளது. அவற்றை சுட்டுத்தள்ள யாருக்கும் அனுமதி தரக்கூடாது என வன விலங்கு ஆர்வலர்கள் குரல் கொடுக்கின்றனர்.
தடுப்பது எப்படி?
வன விலங்கு நடமாட்டத்தை கண்காணித்து உயிருக்கு சேதம் இல்லாமல் தடுப்பது (சூரிய மின்சார வேலி, உயிர் வேலி அமைப்பது), சத்தம், ஒலி எழுப்புவது, தடுப்பு மருந்துகள் (repellent) பயன்படுத்துவது.
தேனீக்கள் வளர்ப்பது
காடுகளின் பரப்பை அதிகப்படுத்தி வனவிலங்குகளுக்கு உணவு, குடிப்பதற்கு தண்ணிர் வைப்பது போன்ற பணிகளை மேற்கொள்ளுவது.
செயற்கை முறையில் இன விருத்தி கட்டுப்பாடு செய்தல்
இவ்வாறாக செய்தால் ஓரளவு வன விலங்குகளின் தாக்குதலில் இருந்து தப்பிக்கலாம்.