September 21, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

காணொலி காட்சி வாயிலாக மக்கள் குறைதீர் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் நடைபெற்றது

நாமக்கல், செப்.13

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து காணொலி காட்சி வாயிலாக மக்கள் குறைத்தீர் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் துர்காமூர்த்தி தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் அவர்கள் மனுதாரர்களுடன் காணொலி காட்சி மூலம் கலந்துரையாடி அவர்களின் குறைகளை கேட்டறிந்ததுடன் மனு சம்மந்தமான துறையினரை காணொலி காட்சி மூலம் தொடர்பு கொண்டு உடனடியாக தீர்வு வழங்க அறிவுறுத்தினார்.

இக்கூட்டத்தில் 8 வட்டாட்சியர் அலுவலகங்கள் 15 வட்டார வளர்ச்சி அலுவலகங்கள் 5 நகராட்சி அலுவலகங்கள் 19 பேரூராட்சி அலுவலகங்கள் என மொத்தம் 47 இடங்களில் இருந்து 23 மனுதாரர்கள் காணொலி காட்சி மூலம் கலந்து கொண்டு முதியோர் உதவித்தொகை விதவை உதவித்தொகை கல்வி உதவித்தொகை இலவச வீட்டு மனைப்பட்டா பட்டா மாறுதல் வாரிசுச்சான்றிதழ் வங்கி கடன் உதவி குடிசை மாற்று வாரிய வீடு குடிநீர் வசதி சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வேண்டி பல்வேறு கோரிக்கைகளை மனுக்களாக அரசுத்துறை அலுவலர்களிடம் வழங்கினார்கள். மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாமில் அனைத்து துறை அலுவலர்கள் தங்கள் அலுவலகங்களில் இருந்து காணொலி காட்சி மூலம் கலந்து கொண்டார்கள்.

அதனைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சி;த்தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டங்களில் வரப்பெற்ற கோரிக்கை மனுக்களின் அடிப்படையில் 8 பயனாளிகளுக்கு வீட்டுமனைப்பட்டா பெறுவதற்கான ஆணைகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

Spread the love