புது தில்லி, ஏப்.22
கோவிட் பரவல், காப்பீட்டு நிறுவனங்களுக்கு கூடுதல் அழுத்தம் கொடுத்து உள்ளது என்றும்; பாதிப்புகள் அதிகரிக்கும் பட்சத்தில், காப்பீட்டு பிரீமிய கட்டணம் அதிகரிக்க கூடும் என்றும், மேக்ஸ் பூபா யஹல்த் இன்சூரன்ஸ்நிறுவனத்தின், கிளைம் பிரிவின் இயக்குனர் பாபாதோஷ் மிஸ்ரா தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
இது குறித்து, அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:
நாட்டில் கோவிட் தொற்றுநோய் பரவத் துவங்கியதிலிருந்து, மருத்துவ பணவீக்கம் என்பது, காப்பீட்டு நிறுவனங்கள் இதுவரை கண்டிராத அளவுக்கு உயர்ந்துள்ளது. மேலும், பல்வேறு காரணங்களை முன்னிட்டு, மருத்துவ காப்பீட்டு பிரீமியம் தொகை அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது. முதல் அலையின் போதே நாங்கள் மோசமாக பாதிக்கப்பட்டோம் என்றும், இரண்டாவது அலை, முதல் அலையை விட தீவிரமாக இருக்கிறது என்றும் அவர் தெரிவித்தார்.
கிளைம் விகிதம் திட்டமிட்டதை விட மோசமாக இப்போதே இருக்கிறது. பிரீமிய தொகையில் எவ்வளவு மாற்றம் தேவைப்படுகிறது என்பது, கோவிட் தொற்று பாதிப்பு எப்படி இருக்கிறது என்பதை பொறுத்தும்; நிறுவனங்களின் நிலையை பொறுத்தும் இருக்கிறது. மேலும், தற்போதுள்ள போக்கு நிலையானது அல்ல என்று அவர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், விரைவில் காப்பீட்டு பிரீமியம், 25 சதம் அளவுக்கு அதிகரிக்க வாய்ப்பிருப்பதாக சந்தை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.