தர்மபுரி, மே 4
தர்மபுரி மாவட்டத்தில் கத்தரி, வெண்டை, தக்காளி உள்ளிட்ட காய்கறிகளை விவசாயிகள் ஆர்வமுடன் சாகுபடி செய்து வருகின்றனர். தற்போது காய்கறிகளின் விலை குறைந்து, தக்காளி, கத்தரி, வெண்டை, முள்ளங்கி ஆகிய காய்கறிகளின் விலை கடும் சரிவடைந்துள்ளது. இதனால், இதை சாகுபடி செய்த விவசாயிகள் வேதனையில் உள்ளனர். கடந்த வாரத்தில், கத்தரிக்காய் ஒரு கிலோ, ரூ.5, வெண்டை மற்றும் தக்காளி, ரூ.6 என விற்பனையானது. தற்போதும் அதன் விலையில் மாற்றம் இல்லை. காய்கறிகளின் விலை உயராமல் உள்ளதால், இதை சாகுபடி செய்த விவசாயிகள் வேதனையில் உள்ளனர்.
Spread the love