August 4, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

காய்கறிக்கு விலையில்லாததால் கவலையில் விவசாயிகள்

கோவை, மே 6

காய்கறிகளுக்கு உரிய விலை கிடைக்காததால், விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

கோவை மாவட்டம், தொண்டாமுத்தூர் வட்டாரத்தில், 25,555 ஏக்கர் பரப்பளவில் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. இங்கு சின்னவெங்காயம், தக்காளி, மஞ்சள், வாழை, தென்னை உள்ளிட்டவை முக்கிய பயிராக பயிரிடப்படுகிறது. மேலும், கத்தரி, வெண்டை, கீரை வகைகள், பூக்கள், பழங்கள் பயிரிடப்பட்டு வருகிறது. அறுவடை செய்யப்பட்ட காய்கறி பயிர்களை, தொண்டாமுத்தூர் மற்றும் பூலுவபட்டி தினசரி காய்கறி மார்க்கெட் மற்றும் வியாபாரிகளுக்கு, விற்பனை செய்து வருகின்றனர்.

இந்நிலையில், கரோனா தொற்று அபாயம் காரணமாக, பள்ளி, கல்லூரி விடுதிகள் மற்றும் ஓட்டல்கள் மூடப்பட்டுள்ளன. கேரளாவுக்கு அனுப்பும் காய்கறி அளவும் குறைந்துள்ளது. இதனால், இருப்பு அதிகரித்து, விலை குறைந்துள்ளது. புதன்கிழமை அன்று பூலுவப்பட்டி தினசரி காய்கறி மார்க்கெட்டில், ஒரு கிலோ வெள்ளரி, ரூ.8க்கும், முலாம்பழம், ரூ.10, வெண்டை, ரூ.25, முட்டைக்கோஸ், ரூ.7, சின்னவெங்காயம், ரூ.15, காலிபிளவர், ரூ.15க்கும் விற்பனையானது. 15 கிலோ எடை கொண்ட ஒரு டிப்பர் தக்காளி, ரூ.90க்கும் விற்பனையானது.

உரிய விலை கிடைக்காததால், உற்பத்தி செலவு கூட கிடைப்பதில்லை என விவசாயிகள் கவலை தெரிவித்தனர்.

Spread the love