January 24, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

காய்கறி பயிரிட்டால் ஊக்கத்தொகை
தோட்டக்கலைத் துறை அறிவிப்பு

கோவை, ஏப்.23

காய்கறி பயிரிடுவோருக்கு, ரூ.2,500 ஊக்கத்தொகை வழங்கப்படும் என, தோட்டக்கலைத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

தேசிய தோட்டக்கலை இயக்கம் மற்றும் தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தில் கோவை மாவட்டம், அன்னூர் ஒன்றியத்தில், மசக்கவுண்டன் செட்டிபாளையம், காரேகவுண்டன் பாளையம்

ஊராட்சிகளிலும், அன்னூர் பேரூராட்சியிலும், தலா இரண்டு லட்சம் ரூபாய் மானியத்தில் சேமிப்புக் கிடங்குகள் கட்டப்பட்டுள்ளன. மேலும், நீர் சேகரிப்பு தொட்டி அமைக்க ஒட்டர்பாளையம்,

காரே கவுண்டன்பாளையம் ஊராட்சிகளில், நான்கு பேருக்கு, தலா, 50 சதவீத மானியம் வழங்கப்பட்டுள்ளது. கஞ்சப்பள்ளியில் நிரந்தர மண்புழு உர கூடாரம் அமைக்க, ரூ.50,000 மானியம்

வழங்கப்பட்டுள்ளது.

இப்பணிகளை, தோட்டக்கலைத் துறை துணை இயக்குனர் புவனேஸ்வரி, நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இது குறித்து மேலும் அவர் கூறுகையில், சொட்டு நீர் பாசனம் அமைக்க சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியமும், இதர விவசாயிகளுக்கு 75 சதவீத மானியமும் வழங்கப்படுகிறது.

காய்கறி பயிரிடுவோரை ஊக்குவிக்க, ஒரு எக்டருக்கு, ரூ.2,500 ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. ரசாயனம் கலக்காமல், இயற்கை முறையில் விவசாயம் செய்பவர்களை ஊக்குவிக்க, அவர்கள்

அங்ககச் சான்று பெற ஆகும் தொகை வழங்கப்படுகிறது.

பண்ணைக் குட்டை, நீர் சேகரிப்பு தொட்டி ஆகியவற்றுக்கும் மானியம் வழங்கப்படுகிறது. விவசாயிகள் இதை பயன்படுத்தி பயன் பெறலாம் என அவர் தெரிவித்தார். ஆய்வின் போது,

தோட்டக்கலை உதவி இயக்குனர்கள் மதுபாலா, அனிஷா பேகம், உதவி தோட்டக்கலை அலுவலர்கள் ரவிக்குமார், கருப்பசாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Spread the love