June 29, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

காய்கறி பயிர்களில் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகள் குறித்து விவசாயிகளுக்கு பண்ணைப்பள்ளி பயிற்சி

கிருஷ்ணகிரி, ஜூன் 23

கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளி வட்டாரத்தில், வேளாண்மைத் துறை மாநில விரிவாக்க திட்டங்களின் விரிவாக்க சீரமைப்பு திட்டத்தின் (அட்மா) கீழ் P.K.பெத்தனப்பள்ளி பகுதி விவசாயிகளுகு்கு காய்கறி பயிர்களில் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகள் குறித்து பண்ணைப்பள்ளி நடத்தப்பட்டது. இந்த பண்ணைப்பள்ளியில் வேளாண்மை உதவி இயக்குநர் வானதி தொடங்கி வைத்து காய்கறி பயிர்களில் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகள் மற்றும் வேளாண்மைத்துறையில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து விளக்கம் அளித்தார்.

இந்த பயிற்சியின் போது, வேளாண்மை அறிவியல் மைய தொழில் நுட்ப வல்லுநர், (உழவியல்) உதயன் பங்கேற்று காய்கறி பயிர்களை தாக்கும் பூச்சிகள் மற்றும் அதன் மேலாண்மை முறைகள், உயிரியல் முறையில் நோய் கட்டுப்பாடு, பூச்சிக்கொல்லி மருந்துகளை கையாளுவதில் பாதுகாப்பு மேலாண்மை, கோடை உழவின் மானாவாரி தொழில்நுட்ப பயன்கள், சொட்டு நீர் பாசனத்தின் நன்மைகள் மற்றும் இயற்கை விவசாயம் குறித்து விளக்கம் அளித்தார். இந்த பண்ணைப்பள்ளியில் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.

அத்துடன் இந்த பண்ணைப்பள்ளியில் வட்டார தொழில் நுட்ப மேலாளர் கவிதா கலந்து கொண்டு பயிர் செய்வதின் நன்மைகள் குறித்து விளக்கம் அளித்தார். உதவி தொழில்நுட்ப மேலாளர் பாரதிராஜா கலந்து கொண்டு அட்மா திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து விளக்கம் அளித்தார்.

Spread the love