July 7, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

காய்கறி விலை சரிவால் விவசாயிகள் வேதனை

கோவை, மே 13

கிணத்துக்கடவு மார்க்கெட்டிற்கு, கேரள வியாபாரிகள் வருகை இல்லாததால், காய்கறிகள் விலை சரிந்தும், தேக்கமடைந்தும் உள்ளன.

கோவை மாவட்டம், கிணத்துக்கடவு காய்கறி மார்க்கெட்டுக்கு, சுற்றுப்பகுதி கிராமங்களில் இருந்து, காய்கறிகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. கேரள வியாபாரிகள் அதிகளவு ஏலத்தில் பங்கேற்பதால், காய்கறிகளுக்கு கூடுதல் விலை கிடைத்து வந்தது. இந்நிலையில், தமிழகத்தில் கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால், கேரளாவுக்கு காய்கறிகள் கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனால், கேரள வியாபாரிகளின் வருகை பாதிக்கப்பட்டது. மேலும், கிணத்துக்கடவு மார்க்கெட்டில் இந்த பாதிப்பு எதிரொலித்தது. இதனால், காய்கறி விலை சரிவை கண்டுள்ளதோடு, 75 சதவீத அளவுக்கு தேக்கமும் அடைந்துள்ளது.

கடந்த வாரம், கத்தரிக்காய் பை ரூ.500, பாகற்காய் கிலோ ரூ.40, பீர்க்கங்காய் ரூ.40, பீட்ரூட் ரூ.8, நேந்திரன் ரூ.40க்கும் விற்பனையானது.

புதன்கிழமை மார்க்கெட் நிலவரப்படி, 15 கிலோ எடையுள்ள கூடை தக்காளி, ரூ.50 – 60க்கு விற்பனையானது. வெண்டைக்காய் கிலோ ரூ.10, பச்சைமிளகாய் ரூ.15, புடலங்காய் ரூ.3, சுரைக்காய் ரூ.4க்கும் விற்பனையானது. மேலும், பீட்ரூட் கிலோ ரூ.3, கொத்தவரை ரூ.10, அவரைக்காய் ரூ.25, பாகற்காய் ரூ.20, பீர்க்கங்காய் ரூ.20, கத்தரிக்காய் (20 கிலோ பை) ரூ.150, நேந்திரன் ரூ.20க்கும் விற்பனையானது. மார்க்கெட்டுக்கு வரும் வியாபாரிகள் கேட்கும் விலைக்கு விளைபொருட்களை விற்பனை செய்யும் நிலையில் விவசாயிகள் உள்ளனர். இதனால், விவசாயிகள் வேதனையில் உள்ளனர்.

Spread the love