மும்பை, மே 7
மாருதி சுசூகி நிறுவனம் மே மாதத்திற்கான சிறப்பு சலுகை மற்றும் தள்ளுபடி உள்ளிட்டவைகளை அறிவித்துள்ளது.
இது குறித்து விரிவான செய்தியாவது:
இந்தியாவில் செயல்படும் தேர்வு செய்யப்பட்ட மாருதி சுசூகி நிறுவனம் விற்பனையாளர்கள் கார் மாடல்களுக்கு அசத்தல் சலுகை, தள்ளுபடி உள்ளிட்டவைகளை வழங்கி வருகின்றன. இவை தள்ளுபடி, எக்சேன்ஜ் போனஸ் மற்றும் கார்ப்பரேட் தள்ளுபடி வடிவில் வழங்கப்படுகின்றன.
மாருதி சுசூகி ஸ்விப்ட் மாடலுக்கு ரூ.10 ஆயிரம் தள்ளுபடி, ரூ.20 ஆயிரம் எக்சேன்ஜ் போனஸ் மற்றும் எல்எக்ஸ்ஐ வேரியண்டிற்கு ரூ.20 ஆயிரம் கூடுதல் தள்ளுபடி வழங்கப்படுகிறது.
மேலும், விட்டாரா பிரெஸ்ஸா இசட்எக்ஸ்ஐ மற்றும் இசட்எக்ஸ்ஐ+ வேரியண்டிற்கு ரூ.20 ஆயிரம் எக்சேன்ஜ் போனஸ், எல்எக்ஸ்ஐ மற்றும் விஎக்ஸ்ஐ வேரியண்ட்களுக்கு ரூ.10 ஆயிரம் தள்ளுபடி வழங்கப்படுகிறது.
மாருதி சுசூகி ஆல்டோ மாடலுக்கு ரூ.17 ஆயிரம் தள்ளுபடி, ரூ.15 ஆயிரம் எக்சேன்ஜ் போனஸ், எஸ் பிரெஸ்ஸோ மாடலுக்கு ரூ. 14 ஆயிரம் தள்ளுபடி, ரூ.15 ஆயிரம் எக்சேன்ஜ் போனஸ் வழங்கப்படுகிறது.
டிசையர் மாடலுக்கு ரூ.20 ஆயிரம் எக்சேன்ஜ் போனஸ், ரூ 8 ஆயிரம் தள்ளுபடி வழங்கப்படுகிறது.
மேலும், வேகன் ஆர் மாடலுக்கு ரூ.8 ஆயிரம் தள்ளுபடி, ரூ.15 ஆயிரம் எக்சேன்ஜ் போனஸ், சிஎன்ஜி மாடலுக்கு ரூ.5 ஆயிரம் கூடுதல் தள்ளுபடி வழங்கப்படுகிறது. ஈகோ மாடலுக்கு ரூ.10 ஆயிரம் தள்ளுபடி, ரூ.15 ஆயிரம் எக்சேன்ஜ் போனஸ், செலரியோ மற்றும் எர்டிகா மாடல்களுக்கு முறையே ரூ.15ஆயிரம் எக்சேன்ஜ் போனஸ் ரூ.3 ஆயிரம் கார்ப்பரேட் தள்ளுபடி வழங்கப்படுகிறது.