June 21, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

கார்மின் ஸ்மார்ட்வாட்ச் இந்திய சந்தையில் அறிமுகம்

புது தில்லி, ஏப்.28

இந்திய சந்தையில் கார்மின் ரூ.20 ஆயிரம் பட்ஜெட்டில் புதிய ஸ்மார்ட்வாட்சை அறிமுகம் செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இது குறித்து விரிவான செய்தியாவது: கார்மின் இந்தியா நிறுவனம் இந்திய சந்தையில் அப்ரோச் எஸ்12 ஸ்மார்ட்வாட்ச் மாடலை அறிமுகம் செய்தது. இந்த வாட்சின் அச்சதலான சிறப்பம்சங்களாவது: இது ஜிபிஎஸ் சார்ந்து இயங்குகிறது. இது கொல்ப் விளையாடுவோருக்காக உருவாக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்வாட்ச் சுமார் 42 ஆயிரம் உலகளாவிய கொல்ப் கோர்ஸ்களை கொண்டிருக்கிறது. இது 1.3 இன்ச் டிஸ்ப்¼ள கொண்டுள்ளது. இது நேரடி சூரிய வெளிச்சத்திலும் டிஸ்ப்¼ளவை சிறப்பாக பார்க்க வழி செய்கிறது. இதில் விரைந்து மாற்றக்கூடிய பேண்ட்கள் உள்ளன.

இது விளையாட்டு வீரரின் தரவுகளை கார்மின் கொல்ப் செயலி மூலம் அப்டேட் செய்கிறது. இந்த செயலி புள்ளிப்பட்டியலை வாராந்திர அடிப்படையில் மட்டுமின்றி விளையாட்டு தொடர், நேரலை புள்ளி பட்டியல், தானியங்கி ஸ்கோர்கார்டு என பல்வேறு அம்சங்களை உள்ளடக்கியுள்ளது.

மேலும், இந்த ஸ்மார்ட்வாட்ச் ஒருமுறை சார்ஜ் செய்தால் 30 மணி நேரத்திற்கு பேக்கப் வழங்குகிறது. இந்தியாவில் கார்மின் அப்ரோச் எஸ்12 விலை ரூ. 20,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது பல்வேறு முன்னணி வலைதளம் மற்றும் ஆப்லைன் தளங்களில் கிடைக்கிறது.

Spread the love