நம் வாழும் கிரகத்தை சூழ்ந்துள்ள காற்று மண்டலத்தில் பல வாயு கலவைகள் உள்ளன. இதில் நைட்டிரஜன் 78%, ஆக்ஸிஜன் 20%, கார்பன் டை ஆக்சைடு 3% மற்ற பிரதான வாயுகளும் கலந்துள்ள கலவை தான் காற்று மண்டலம். இந்த வாயுக்களின் சமசீர் நிலை மாறாமல் இருக்கும் வரை, காற்று, காற்று மண்டலத்தில் எந்த விதமான பாதிப்பும் இருக்காது. இதில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டால் பாதிப்புக்குள்ளாகி விடும். 2019ம் ஆண்டில் இந்தியாவில் மட்டும் காற்று மாசுபாட்டினால் 17 லட்சம் பேர் பலியானதாக “லான் செட்” ஆணையம் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ள தகவல் நம்மை அதிர்ச்சி அடைய வைக்கின்றன. உலக பருவகால மாற்றம், தொழில் மயமாதல், வாகன போக்குவரத்து ஆகியவற்றால் காற்று மண்டலம் பாதிப்புக்குள்ளாகி வருகின்றன. எடுத்துக்காட்டாக கொரானா காலத்திற்கு பின் 2 wheeler இல்லாத வீடுகளே இல்லை எனலாம். இதனால் காற்று புகைமண்டலமாக மாறிவிடுகிறது. ஆலை தூசி, கல் குவாரி தூசி, மகரந்தம், மீத்தேன் வாயு நிறைந்த காற்றை தான் நாம் சுவாசிக்கிறேம். எடுத்துக்காட்டாக 1951ல் 30 லட்சம் வாகனங்கள் இருந்தன. 2017ஆம் ஆண்டு கணக்குபடி 16.83 கோடி வாகனங்கள் உள்ளது நம்மை அதிர்ச்சியடைய வைத்துள்ள தகவலாகும். இரு சக்கர வானங்கள் ஓரு நாளில் பயன்படுத்தும் போது வெளியேற்றும் கார்பன் டை ஆக்ஸைடு அளவு 8000 கிராம் என்றால் மற்ற வாகனங்களின் அளவை பார்க்கும் போது தலையே சுற்றுகிறது.
தடுக்க என்ன செய்யலாம்
1) அதிகளவில் மரங்கள் நடலாம். தற்போது கூட தமிழக அரசு பசுமை போர்வை காண இயக்கத்தின் கீழ் எங்கு எங்கு வாய்ப்பாக உள்ள இடங்களில் மரங்கள் நடுதல்
2) தனிப்பட்ட வாகன போக்குவரத்தை தவிர்த்து பொது போக்குவரத்தை பயன்படுத்துதல்
3) மாசுகளை குறைக்க மத்திய, மாநில அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு தருதல்
4) பிளாஸ்டிக், மற்ற கழிவுகளை எரிக்காமல் உரமாக்கிட நடவடிக்கை எடுத்தல்