August 5, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

காலை 8:00 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை துவக்கம் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தகவல்

சென்னை, ஏப்.23

தமிழகத்தில் மே 2-ம் தேதி காலை 8:00 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை துவங்கும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்துள்ளதாவது:

ஓட்டு எண்ணிக்கைக்கான மேஜைகளை குறைப்பது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை. ஓட்டு எண்ணும் அறை சிறியதாக இருந்தால், 2 அறைகளில் ஓட்டு எண்ணிக்கை நடக்கும். ஒரு அறைக்கு 7 மேஜைகள் என 14 மேஜைகளில் ஓட்டு எண்ணிக்கை நடக்கும்.

மேலும், முகவர்களுக்கு கோவிட் பரிசோதனை செய்வது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசித்து முடிவு செய்யப்படும் என்றார். 72 மணி நேரத்திற்கு முன் கோவிட் பரிசோதனை செய்யப்பட வேண்டும் என்பதால், இது குறித்து விரைவில் அறிவிக்கப்படும்.

மேலும், அனைத்து தொகுதிகளிலும் மே 2-ம் தேதி காலை 8:00 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை துவங்கும் என்றும், 8:00 மணிக்கு தபால் ஓட்டுகளும், 8:30 மணிக்கு இயந்திரத்தில் பதிவான ஓட்டுகளும் எண்ணப்படும் என்றும் சத்யபிரதா சாஹூ தெரிவித்தார்.

Spread the love