June 25, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

கால்சியம் நிறைந்த காலிபிளவர் இலை

தேனி, ஏப்.11

காலிபிளவர் இலையில் அடங்கியுள்ள சத்துக்கள் மற்றும் சமைக்கும் முறைகள் பற்றி போதிய விழிப்புணர்வு இல்லாமையால் நம்மில் பொரும்பாலானோர் காலிபிளவர் இலையை வீணாக்கி வருகிறோம். கால்சியம் மற்றும் இரும்புச்சத்துகள் நிறைந்த காலிபிளவர் இலையை சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் உணவுகளில் சேர்த்து கொள்வதன் மூலம் ஆரோக்கியமான வாழ்வு வாழலாம்.

காலிபிளவர் இலை மற்றும் காலிபிளவர் பூவில் அடங்கியுள்ள சத்து மதிப்புகள் (100 கிராம்)

சத்துக்கள் காலிபிளவர் இலையில் அடங்கியுள்ள சத்துக்கள் காலிபிளவர் பூ-வில் அடங்கியுள்ள சத்துக்கள்
ஆற்றல் 66(கிலோ) 30 (கிகலோ)
புரதம் 5.9 (கி) 2.6(கி)
கார்போஹைட்ரேட் 7.6 (கி) 4.0 (கி)
கொழுப்பு 1.3 (கி) 0.4 (கி)
கால்சியம் 626 (மிகி) 33 (மிகி)
பாஸ்பரஸ் 107 (மிகி) 57 (மிகி)
இரும்பு 40 (மிகி) 1.23 (மிகி)

காலிபிளவர் இலையிலிருந்துதயாரிக்கப்படும் மதிப்புக்கூட்டப்பட்டபொருட்கள்

  1. காலிபிளவர் இலை கூட்டு
  2. காலிபிளவர் இலை பொரியல்
  3. காலிபிளவர் இலை மசியல்
  4. காலிபிளவர் இலை சட்னி
  5. காலிபிளவர் இலை பொடி
  6. காலிபிளவர் இலை சூப் மிக்ஸ்
  7. காலிபிளவர் இலை பிஸ்கட்
  8. காலிபிளவர் இலை கேக்
  9. காலிபிளவர் இலை இட்லி/தோசை பொடி

காலிபிளவர் இலை கூட்டு

தேவையான பொருட்கள்

பாசிப்பயிறு – 50 கி
காலிபிளவர் இலை – 50 கி
தேங்காய் – 20 கி
கருவேப்பிலை – 10 கி
சீரகம் – 2 கி
பச்சைமிளகாய் – 3 கி
மஞ்சள் துhள் – ஒருசிட்டிகை
உப்பு – தேவைக்கேற்ப
நல்லெண்ணெய் – 1 தேக்கரண்டி

செய்முறை

பாசிப்பயிரை இருபது நிமிடம் வேக விடவும். பின் அதை மசித்துக் கொள்ளவும். அதனுடன் காலிபிளவர் இலைகளையும் உப்பையும் சேர்த்து வேக விடவும். பின்னர் சீரகம், கருவேப்பிலை, பச்சை மிளகாய் மற்றும் தேங்காய் அரைத்து சேர்த்து ஜந்து நிமிடம் கொதிக்க விடவும். இறுதியில் நல்லெண்ணெயில் கடுகு, உளுந்தம் பருப்பு இட்டு தாளிக்க வேண்டும்.

குறிப்பு: காலிபிளவர் இலையை 1 லிட்டர் சுத்தமான தண்ணீரில் 20 கிராம் உப்பு மற்றும் சிறிதளவு மஞ்சள் தூள் இட்டு பத்து நிமிடம் ஊற வைத்து, கழுவி பின்பு நறுக்கி சமையலுக்கு பயன்படுத்த வேண்டும்.

தகவல் : ம.இரம்யா சிவசெல்வி, மனையியல் தொழில்நுட்ப வல்லுநர், வேளாண் அறிவியல் மையம், தேனி மாவட்டம்.

Spread the love