July 7, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

கால்நடைகளுக்கு உணவாகும் வாழை இலை

சிவகங்கை, ஏப்.28

மானாமதுரையில், வாழை இலை கட்டுகளுக்கு உரிய விலை கிடைக்காததால் விவசாயிகள் வாழை இலைகளை கால்நடைகளுக்கு உணவாக கொடுக்கின்றனர்.

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை பகுதியில் கரோனா கட்டுப்பாடு காரணமாக, வாழை இலைக்கு உரிய விலையில்லாததால், விவசாயிகள் கால்நடைகளுக்கு உணவாக கொடுக்கின்றனர்.

தமிழகத்தில் கரோனா தொற்று இந்தாண்டு 2வது அலையாக மாறி மீண்டும் மக்களை பாதித்து வருகிறது. அரசு கரோனா தொற்றின் காரணமாக திருமணம், திருவிழாக்கள், சுப நிகழ்ச்சிகளுக்கு

கட்டுப்பாடுகளை விதித்துள்ளதால் பலர் விசேஷங்களை தள்ளி வைத்துள்ளனர்.

இது குறித்து மானாமதுரை வட்டாரம், கள்ளர்வலசை விவசாயி ஒருவர் கூறுகையில், 2 ஏக்கரில் வாழை பயிரிட்டிருந்த நிலையில் தற்போது வாழை இலைகள் அறுக்கும் நேரத்தில் இலை

கட்டுகளுக்கு உரிய விலை கிடைக்காததாலும், இலையை அறுக்கும் செலவிற்கு கூட வாழை இலை விலை போகாததால் அறுக்கப்பட்ட இலைகளை கால்நடைகளுக்கு உணவாக கொடுக்க

வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. விளைந்தும் தேவை இல்லாத காரணத்தால் பல ஆயிரம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது, என்றார்.

Spread the love