May 18, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

கால்நடை மருத்துவமனையில் தோட்டக்கலைக் கல்லூரி மாணவர்களுக்கு பயிற்சி

தேனி, மார்ச் 11

தேனி மாவட்டம், பெரியகுளம் தோட்டக்கலைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தைச் சேர்ந்த மாணவர்கள் மாரிசெல்வம், மருததுரை, முகமது இஜாஸ், நவீன்குமார், நிகேஷ், பிரவீன்சந்திரன், பிரவின், ராகுல், ராகுல்.எஸ் ஆகியோர் ஊரக தோட்டக்கலை அனுபவப்பணித் திட்டத்தின் மூலம் G.தும்மலப்பட்டியில் உள்ள கால்நடை மருத்துவமனையை பார்வையிட்டனர். அங்கு சுப்ரமணி (கால்நடை மருத்துவர்) முனீஸ்வரி (கால்நடை ஆய்வாளர்) ஆகியோர் மாணவர்களுக்கு கால்நடை மருத்துவமனையின் அமைப்பு மற்றும் செயல்பாடுகள் குறித்து விவரித்தனர். மாடுகளுக்கு செயற்கை கருத்தரிப்பு (Artificial Insemination) ஊசி செலுத்துவது குறித்து விவரம் அளிக்கப்பட்டு, மாடுகளுக்கு ஊசி செலுத்தி காண்பிக்கப்பட்டது. அனைத்து கால்நடைகளுக்கும் முதலுதவி மற்றும் சிகிச்சை அளித்தல், வாரம் ஒருமுறை கோழிகளுக்கு கழிச்சல் தடுப்பூசி (RDVK), வருடம் இருமுறை வாய்கால் நோய்த்தடுப்பூசி செலுத்துதல், கால்நடைகளுக்கு தாதுஉப்புக்கலவை வழங்குதல், குடற்புழு நீக்கம் போன்ற செயல்பாடுகள் குறித்தும், கால்நடைகளுக்கான தீவனப்பெருக்கம், விதவைகளுக்கு வெள்ளாடு வழங்குதல், இலவச கால்நடை வழங்குதல், கொட்டகை அமைத்து தருதல் போன்ற திட்டங்கள் குறித்தும் மாணவர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.

Spread the love