சேலம், மார்ச் 29
சேலம் மாவட்டத்தில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் அருகில் கால்நடை மருத்துவமனை வளாகத்தில் அமைந்துள்ள கால்நடை பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் நாளை (31ம் தேதி) வெள்ளாடு மற்றும் செம்மறி ஆடு வளர்ப்பு
பயிற்சியும், ஏப்ரல் 7ம் தேதி கறவை மாடு வளர்ப்பு பயிற்சி மற்றும்
21ம் தேதி நாட்டுக்கோழி வளர்ப்பு பயிற்சிகள் நடைபெறும். மேற்கண்ட நாட்களில் காலை 10.30 மணியளவில் நமது பயிற்சி மையத்தில் பயிற்சி நடைபெறும்.
இத்தகவலை சேலம், கால்நடை பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. தொலைபேசி எண் 0427 2410408ல் தொடர்பு கொள்ளலாம்.
Spread the love