May 17, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

காளான் வளர்ப்பு பயிற்சியில் வேளாண்மை பல்கலை மாணவியர்

கோவை, மாரச் 8

கோவை, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் தோட்டக்கலை இறுதியாண்டு பயிலும் மாணவிகள், சிப்பி காளான் வளர்ப்பு முறைகளைக் கேட்டு கற்றுக்கொண்டனர்.

கோவை மாவட்டம், மதுக்கரை ரங்கசமுத்திரம் கிராமத்தை சேர்ந்த கணேஷ் குமார் என்பவர் காளான் விதைகள் மற்றும் காளான்கள் உற்பத்தி செய்து வருகிறார். இன்று தோட்டக்கலைத் துறை மாணவியர்கள் அவரது பண்ணைக்குச் சென்று காளான் உற்பத்தி செய்வது குறித்தும் விதைகள் உற்பத்தி செய்வது குறித்து கேட்டுத் தெரிந்துகொண்டனர். தென்னை கீற்றுகளை கொண்டு குடில் அமைத்து சிற்பி காளான்களை உரிய முறையில் உற்பத்தி செய்து வருகிறார். அறையின் வெப்பநிலை 20 டிகிரி முதல் 25 டிகிரி செல்சியஸ் வரை கட்டுப்பாட்டுக்குள் இந்தக் குடில் வைக்கப்படுகிறது. ஈரப்பதம் ஒழுங்கு படுத்தப்படுகிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும் சிப்பி காளான் மொத்தமாகவும், சில்லைரையாகவும் விற்கப்படுகிறது.

இங்கு காளான் விதைகளும் உற்பத்தி செய்து விற்பனை செய்யப்படுகிறது. காளான் உற்பத்தி தொடர்பான தகவல்களை கணேஷ் குமார் மாணவியர்களுக்கு எடுத்துரைத்தார். மேலும் அவர்கள் சுற்று புற கிராமங்களில் உள்ள விவசாயிகளை நேரில் சந்தித்து சாகுபடி முறைகளையும் அனுபவ அறிவுகளையும் தெரிந்து கொண்டனர்.

Spread the love