June 25, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

காளான் வளர்ப்பு மற்றும் சந்தைப்படுத்துதல் பயிற்சி

சிவகங்கை, ஜூன் 13

சிவகங்கை மாவட்டம், பிள்ளையார்பட்டி, பஞ்சாப் நேஷனல் வங்கியின் உழவர் பயிற்சி மையம் சார்பாக மாதந்தோறும் பல்வேறு கால்நடைகள் மற்றும் கோழி வளர்ப்பு குறித்த செயல்முறை விளக்கப் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் வருகின்ற ஜூன் 23ம் (வியாழன்) தேதி அன்று காளான் வளர்ப்பு மற்றும் சந்தைப்படுத்துதல் என்ற தலைப்பில் பயிற்சி வகுப்பு காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். பயிற்சியானது பஞ்சாப் நேஷனல் வங்கி, உழவர் பயிற்சி மையம்,
பிள்ளையார்பட்டி, சிவகங்கை மாவட்டம் – 630212 என்ற இடத்தில் நடைபெறும். முன் பதிவுக்கு 94885 75716 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

பயிற்சியின் சிறப்பம்சங்கள் :
இந்த பயிற்சி வகுப்பில் காளான் வளர்ப்பின் முக்கியத்துவம், விதை உற்பத்தி, வகைகள் மற்றும் மதிப்பூட்டப்பட்ட உணவுகள் தயாரித்தல் போன்றவை குறித்து செயல்முறை விளக்கத்தோடு பயிற்சி அளிக்கப்படுகிறது. மேலும் இப்பயிற்சி வகுப்பில் விவசாயிகள், இல்லத்தரசிகள், பண்ணையாளர்கள், இளைஞர்கள் மற்றும் ஆர்வமுள்ளவர்கள் கலந்து கொள்ளலாம். பயிற்சி இலவசம்.

Spread the love