June 25, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

கிசான் கடன் அட்டை குறித்த விழிப்புணர்வு முகாம்

விருதுநகர், ஏப்.25

விருதுநகர் வட்டாரத்திற்கு உட்பட்ட 58 கிராம பஞ்சாயத்துகளில் 24.4.2022 முதல் 1.05.2022 வரை உள்ள 8 நாட்களுக்கு விவசாயிகளுக்கான கிசான் கடன் அட்டை வழங்குதல் குறித்த விழிப்புணர்வு முகாம் விருதுநகர் வட்டார வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பாக நடைபெற்று வருகிறது. இம்முகாமில் வங்கிகளின் மூலம் கடன் அட்டை வழங்குவதற்குரிய விண்ணப்ப படிவம் வழங்கப்பட்டு வருகிறது. விவசாயிகள் தங்களது ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், பாஸ்போர்ட் அளவு புகைப்படம், வங்கி கணக்கு புத்தக நகல், கம்யூட்டர் பட்டா மற்றும் அடங்கல் போன்ற நில ஆவணங்களுடன் கலந்து கொண்டு பயன் அடையுமாறும், மேலும் தகவல்களுக்கு தங்களது பகுதி உதவி வேளாண்மை அலுவலர்களை தொடர்பு கொள்ளுமாறும் விருதுநகர் வேளாண்மை உதவி இயக்குனர் ப.கணேசன் கேட்டுக் கொண்டார்.

Spread the love