June 25, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

கிசான் கடன் அட்டை (KCC) பெறுவதற்கான சிறப்பு முகாம்

விருதுநகர், ஏப்.28

கிசான் கடன் அட்டை (KCC) திட்டத்தின் கீழ் விவசாயிகளைப் பதிவு செய்து தங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கி அல்லது தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மூலம் கிசான் கடன் அட்டை வழங்கப்பட உள்ளது. இதற்கான 27.04.2022ம் தேதிய முகாமில் விருதுநகர் மாவட்டம் சேதுநாராயணபுரம் கிராம பஞ்சாயத்தில் நேரடி முகாம் நடத்தப்பட்டது. 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் முகாமில் கலந்துகொண்டனர். மேலும் உழவன் செயலி பதிவிறக்கம் செய்தல் அதன்மூலம் பயனாளிகளாக பதிவுசெய்தல் திட்டங்களில் பயன்பெறும் முறைகள் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளும் விவசாயிகளுக்கு வேளாண்மைத்துறை அலுவலர் இரா.சுரேஷ்குமாரால் விரிவாக எடுத்துரைத்தார். இதில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க செயலர் மாமுச்சாமி பயிர்க் கடன்கள் மற்றும் பயிர் காப்பீடு பற்றி எடுத்துரைத்து பயனடைய கேட்டுக்கொண்டார்.

Spread the love