October 17, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

கிசான் கோஸ்திஸ் – விவசாயிகள் கருத்தரங்கு

சிவகங்கை, அக்.11

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் வட்டாரத்தில் வேளாண்மைத்துறை மற்றும் உழவர் நலத்துறையின் கீழ் இயங்கி வரும் (அட்மா) விரிவாக்க சீரமைப்பு திட்டத்தின் மூலம் கிசான் கோஸ்திஸ் என்ற கருத்துக் கண்காட்சி நிகழ்ச்சி மழவராயனேந்தல் கிராமத்தில் நடைபெற்றது. இப்பயிற்சிக்கு வருகை புரிந்த மழவராயனேந்தல் மற்றும் அக்கிராமத்திற்கு உட்பட்ட விவசாயிகள் அனைவரையும் மழவராயனேந்தல் ஊராட்சி மன்ற தலைவர் மு.கருணாநிதி வரவேற்புரையாற்றினார். மேலும் கஜேந்திரன் கவுன்சிலர் மற்றும் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ஆகியோர் கலந்து கொண்டனர். இப்பயிற்சியில் 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

இப்பயிற்சியில் பன்னீர்செல்வம், துணை வேளாண்மை இயக்குந ர்சிவகங்கை, தலைமை வகித்தார். மேலும் அவரது தலைமை உரையில் அட்மா திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் வகையிலான விவசாயிகள் பயிற்சிகள் சம்பந்தமான உள் மற்றும் வெளிமாநில, மாவட்ட அளவிலான பட்டறிவு, கண்டுணர்வு பயிற்சிகள் செயல் விளக்கத்திடல்கள் அமைத்தல் தொடர்பாக திட்டங்களை பற்றி விவசாயிகளுக்கு விரிவான முறையில் எடுத்துக்கூறினார். மேலும் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் மற்றும் தரிசு நிலங்களை சாகுபடிக்கு கொண்டு வருதல் பற்றிய திட்டங்களை விவசாயிகளுக்கு விரிவான முறையில் எடுத்துக் கூறினார். திருப்புவனம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் சே.கண்ணன், வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறை செயல்படுத்தி கொண்டிருக்கும் மத்திய மற்றும் மாநில திட்டங்கள், அரசு மானிய விபரங்கள் அத்திட்டத்தின் பயன்பாடுகள், வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் தரிசு நிலங்களை விளை நிலங்களாக மாற்றி சாகுபடி பரப்பை அதிகப்படுத்துதல் ஆகிய திட்டங்களை விரிவாக விவசாயிகளுக்கு எடுத்து கூறினார். மேலும் இப்பயிற்சியல் மேலும் பாராம்பரிய நெல் இரகங்களான மாப்பிள்ளை சம்பா, கருங்குருவை மற்றும் கருப்பு கவனி சாகுபடி செய்தல் மற்றும் சிறுதானியப் பயிர்கள், பயறு வகை பயிர்கள், திருப்பாசேத்தி உழவர் உற்பத்தியாளர் குழுவின் மூலமாக தயாரிக்கப்பட்ட எண்ணெய் ஆகியவை கருத்துக் கண்காட்சியில் வைத்து அதன் முக்கித்துவம் பற்றி எடுத்துக் கூறப்பட்டது. தேனீ பெட்டி,நெல் வரிசை விதைப்பு கருவி ஆகியவை விவசாயிகளுக்கு விரிவான முறையில் எடுத்துக் கூறும் வகையில் கருத்துக் கண்காட்சி வைக்கப்பட்டது. இக்கூட்டத்தில் துணை வேளாண்மை அலுவலர் ச.முனியசாமி, பிரதம மந்திரி நுண்ணீர் பாசனதிட்டத்தின் மூலம் சிறு / குறு விவசாயிகளுக்கு 100 சதவீதம் மானியத்தில் தெளிப்பு நீர்ப்பாசனம் மற்றும் மழைத்தூவான் வழங்கப்பட்டு வருகிறது என்பதனை எடுத்துக் கூறினார். வேளாண்மைத் துறையின் மூலம் விநியோகிக்கப்படும், அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா, ரைசோபியம், சூடோமோனாஸ் மற்றும் டிரைக்கோடெர்மாவிரிடி இவைகளை பயன்படுத்தி நெல் மற்றும் பயறு வகைப் பயிர்களில் விதை நேர்த்தி செய்வதன் மூலம் ஏற்படக்கூடிய பயன்பாடுகள் குறித்து விரிவாக விவசாயிகளுக்கு எடுத்து கூறினார்.

இப்பயிற்சியில் தோட்டக்கலை உதவி இயக்குநர் மு.பாண்டியராஜன், வேளாண் வணிகம் மற்றும் விற்பனை துறை அலுவலர் மகாலிங்கம், சகோதர துறை அலுவலர்கள் கலந்து கொண்டு துறைகள் சார்ந்த திட்டங்களை பற்றி எடுத்து கூறினார்கள். மேலும் இப்பயிற்சியில் அட்மா திட்ட பணியாளர் வட்டார தொழில் நுட்ப மேலாளர் க.அன்பழகன் அட்மா திட்டத்தில் செயல்படுத்திக் கொண்டிருக்கும் விவசாயிகள் பயிற்சிகள் ,செயல்விளக்கங்கள் குறித்து விரிவாக விவசாயிகளுக்கு எடுத்துக் கூறினார். உதவி தொழில் நுட்ப மேலாளர்கள் சண்முகப்பிரியா மற்றும் நந்தினி பயிற்சியில் கலந்து கொண்டு பயிற்சிக்கான ஏற்பாடுகள் செய்தனர். முடிவில் உதவி வேளாண்மை அலுவலர் ராஜா நன்றி கூறினார்.

Spread the love