June 21, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

கியா மோட்டார்ஸின் புதிய லோகோ அறிமுகம்

மும்பை, ஏப்.28

கியா மோட்டார் கார்ப்பரேசன் புது லோகோவை அறிமுகம் செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

புது லோகோ அறிமுகம் செய்யப்பட்டதோடு, பிராண்டு பெயரை கியா மோட்டார்ஸ்-இல் இருந்து கியா இந்தியா என மாற்றியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

மேலும் ஏழு எலெக்ட்ரிக் வாகனங்கள் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக கியா இந்தியா தெரிவித்துள்ளது.

உலகின் முன்னணி பிராண்டாக கியா விளங்குகிறது. இந்திய சந்தையில் 2018ம் ஆண்டு கியா நிறுவனம் களமிறங்கியது. ஆந்திர பிரதேச மாநிலத்தின் அனந்தப்பூர் பகுதியில் கியா தனது ஆலையை நிறுவி இருக்கிறது. 2018 இந்திய ஆட்டோ எக்ஸ்போ விழாவில் தனது எஸ்பி கான்செப்ட் மாடலை அறிமுகம் செய்தது குறிப்பிடத்தக்கது.

இந்த காம்பேக்ட் எஸ்யுவி மாடலை ஆகஸ்ட் 2019ல் கியா செல்டோஸ் பெயரில் அறிமுகம் செய்தது. பின் இந்திய சந்தையில் அதிகம் விற்பனையாகும் மாடலாக கியா செல்டோஸ் மாறியது. இதைத் தொடர்ந்து கியா சொனெட் மற்றும் கியா கார்னிவல் மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டன.

Spread the love