October 17, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

கிராமப்புற இளைஞர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி

கோவை, அக்.9

கோயம்புத்தூர் மாவட்டத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையில் அட்மா 2021-2022-ம் திட்டத்தில் கிராமப்புற இளைஞர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி 4.10.2021 முதல் 9.10.2021 நாள் வரை தமிழ்நாடு வேளாண் பல்கலைகழத்தில் உள்ள வேளாண் பொறியியல் மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் நடைபெற்றது. ”அகல உழுகிறதை ஆழ உழுதல் நன்று’ என்ற பழமொழிக்கு ஏற்ப இந்த பயிற்சியில் கிராமப்புற இளைஞர்களுக்கு விவசாய பணிக்கு தேவையான டிராக்டர், மின் டிராக்டர், பவர் வீடர், விசைதெளிப்பான், கொத்து கலப்பை, நீர் பாசனம் வாய்க்கால் அமைக்கும் கருவி, தென்னை மரம் ஏறும் கருவிகள், தெளிப்பான்கள் போன்ற பண்ணைக் கருவிகள் பயன்பாடுகள், எவ்வாறு இணைத்தல் மற்றும் இயக்குதல் பற்றிய பயிற்சிகள் கொடுக்கப்பட்டது.

மேலும் உழவு பணியில் தேவையான முதன்மை உழவு, இரண்டாம் உழவு பணிக்கு தேவையான கருவிகள் பற்றியும், அவற்றை முக்கியத்துவத்தையும், நிலக்கடலை, பயறு வகை, பருத்தி பயிர்களை இயந்திரத்தின் முலம் விதைகளை விதைப்பது, களைகள் நிர்வாகம், தெளிப்பான்கள், ட்ரோன் முலம் மருந்து தெளித்தல், அறுவடை இயந்திரத்திதை எவ்வாறு உபயோகித்தல் மற்றும் பாரமாரிப்புகள் பற்றி பயிற்சி அளிக்கபட்டது. இத்திட்டத்தில் மாவட்ட திட்ட இயக்குநர், திட்ட துணை இயக்குநர், வேளாண் பொறியியல் துறையின் முதல்வர், தலைவர், துணை உதவி பேராசிரியர்கள், கலந்துக்கொண்டனர்.

Spread the love