June 25, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

கிராமப்புற பங்கீட்டு மதிப்பீட்டில் வேளாண் மாணவர்கள்

திருப்பூர், மார்ச் 30

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைகழகம், கோவை, வேளாண் கல்லூரி இறுதியாண்டு மாணவர்கள் 10 பேர் கொண்ட குழு கிராமப்புற வேளாண் அனுபவப் பயிற்சியின் ஒரு பகுதியாக திருப்பூர் மாவட்டம், பொங்கலூர் வட்டாரம், வடக்கு அவினாசிபாளையம் கிராமத்தில் சமூக வரைபடம், வள வரைபடம், சிக்கல் மரம், நகர்வு வரைபடம், பருவகால காலண்டர், தினசரி செயல்பாடு காலக்கோடு, வெண் வரைபடம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இவற்றில் அவ்வூர் மக்களையே ஈடுபடுத்தி அக்கிராம அமைப்பு முறை மற்றும் தற்போதைய நிலையை அவ்வூர் மக்களே வரைபடம் மூலமாக அறிந்து கொண்டு தங்கள் கிராமத்திற்கு மேலும் என்னென்ன வசதிகள் தேவை என்பதைப் புரிந்து கொண்டனர்.

Spread the love