May 17, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

கிராமப்புற மதிப்பீடு நடத்திய வேளாண் மாணவிகள்

மதுரை, மார்ச் 15

மதுரை மாவட்டம், வேளாண்மை அறிவியல் நிலையத்திற்கு திருச்சி அன்பில் தர்மலிங்கம் வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் மாணவிகள் களப்பயணம் மேற்கொண்டனர். ஊரக வேளாண் பணி அனுபவத்தின் கீழ் ம.ரவ்மிதா, இரா.ரோஷில்பென்சுவீட்டி, ந.சங்கீதா, க.ர.சரண்யா, சா.சரண்யா, சீனு.சரண்யா, ர.சத்யா, செ.ஷர்மிளா, ப.வ.சிந்து, க.சினேகா, தி.சினேகா ஆகியோர் இப்பயணம் மேற்கொண்டனர். அவர்கள் மதுரையில் உள்ள அம்பலக்காரன்பட்டியில் கிராமப்புற மதிப்பீட்டு மேற்கொண்டனர். தோட்டக்கலை உதவி இயக்குனர் நிர்மலா, தலைமையில் வேளாண் மாணவிகள் இந்த கிராமப்புற மதிப்பீட்டை நடத்தினர். அதில் சமூக வரைபடம், வளவரைபடம், காலநிலை அட்டவணை, குழு கலந்துரையாடல் மற்றும் குறுக்கு நடை ஆகியவை இடம் பெற்றுள்ளது. இந்த கிராமப்புற மதிப்பீட்டில் விவசாயிகளும் பொது மக்களும் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

Spread the love