கோவை, மார்ச் 9
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம், கோவை, வேளாண் ௧ல்லூரி இறுதி ஆண்டு மாணவிகளின் 11 பேர் கொண்ட குழு கிராமப்புற வேளாண் ௮னுபவப் பயிற்சியின் ஒரு பகுதியாக கோவை மாவட்டம், ௮ன்னூர் வட்டாரம், அல்லப்பாளையம் கிராமத்தில் சமூக வரைபடம், வள வரைபடம், சிக்கல் மரம், காலக்கோடு, பருவகால காலண்டர் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இவற்றில் அவ்வூர் மக்களையே ஈடுபடுத்தி அக்கிராம அமைப்பு முறை மற்றும் தற்போதைய நிலையை வரைபடம் மூலமாக அவர்களே அறிந்து கொண்டு தங்கள் கிராமத்திற்கு மேலும் என்னென்ன வசதிகள் தேவை என்பதனையும் புரிந்து கொண்டனர்.
Spread the love