June 25, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் திங்களன்று முதல்வர் துவக்கி வைக்கிறார்

விருதுநகர், மே 18

விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் வட்டாரத்தில் தெற்கு வெங்காநல்லூர், சமுசிகாபுரம் மற்றும் மேலபாட்ட கரிசல்குளம் பஞ்சாயத்துகளில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் தற்போது செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டமானது வரும் 23.5.22 அன்று முதலமைச்சரால் தொடங்கி வைக்கப்பட உள்ளது. அந்த சமயத்தில் இக்கிராமத்தில் உள்ள அனைத்து விவசாயிகள் மற்றும் குடும்பங்களுக்கு வேளாண்மை மற்றும் தோட்டக்கலை துறை சார்பாக பல்வேறு இடுப்பொருட்கள் வழங்க உள்ளன. வேளாண்மை துறையின் சார்பாக 100% மானியத்தில் சுமார் 200 பண்ணை குடும்பங்களுக்கு தலா 3 தென்னங்கன்றுகள் வீதம் 600 தென்னங்கன்றுகளும், 75 சத மானியத்தில் வரப்பு பயிர் சாகுபடிக்கு ஒரு ஹெக்டேருக்கு 5 கிலோ உளுந்து வீதம் 15 விவசாயிகளுக்கு, கிராமத்திற்கு 5 விசைத்தெளிப்பான் 50% மானியத்திலும், 5 கைத்தெளிப்பான் ரூ.750 மானியத்திலும் வழங்கப்பட உள்ளது. இதற்கான பயனாளிகள் பட்டியல் விவசாயிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு, தற்போது வேளாண்மைத்துறை மூலம் தயாரிக்கப்பட்டு வருகிறது. விவசாயிகள் யாரேனும் விடுபட்டு இருந்தால் உடனடியாக வேளாண்மைத் துறையை பின்வரும் எண்களில் தொடர்பு கொள்ளலாம். சமுசிகாபுரம், உதவி வேளாண்மை அலுவலர், முனியப்பன் 87602 76611, தெற்கு வெங்கநல்லூர், உதவி வேளாண்மை அலுவலர், சுருளிசாமி 80728 34877, மேலபாட்ட கரிசல்குளம், உதவி வேளாண்மை அலுவலர் சுரேஷ் 95669 72849 ஆகியோரை அணுக கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு ராஜபாளையம் வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகலாம் என வேளாண்மை உதவி இயக்குநர் (பொ) கு.தனலட்சுமி கேட்டுக் கொள்கிறார்.

Spread the love