July 25, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

கிராம சுகாதார செவிலியர்களுக்கான ஆலோசனைக்கூட்டம்-நாமக்கல் மாவட்ட ஆட்சியர் தலைமை

நாமக்கல், ஜூலை 22

நாமக்கல் மாவட்டம், நாமகிரிப்பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், அதிக குழந்தைப்பேறை கட்டுப்படுத்த மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்த அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் கிராம சுகாதார செவிலியர்களுக்கான ஆலோசனைக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி சிங் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது,

நாமக்கல் மாவட்டத்தில் கொல்லிமலை, நாமகிரிப்பேட்டை, எருமப்பட்டி ஆகிய ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில்; தமிழ்நாட்டின் சராசரியை விட, அதிகமாக உயர் வரிசை பிறப்பு என்கின்ற அதிக குழந்தை பெற்றுக்கொள்ளும் நிலை பெண்களிடம் உள்ளது. தற்போதும் கொல்லிமலைப்பகுதிகளில் அதிகபட்சமாக 5 குழந்தை பெற்றெடுத்த தாய்மார்களும், நாமகிரிப்பேட்டை பகுதியில் 4 குழந்தை பெற்றெடுத்த தாய்மார்கள் உள்ளது வருத்தப்படக் கூடியதாகும்.

இதனை தடுத்து நிறுத்த மாவட்ட நிர்வாகம் 3 ஊராட்சி ஒன்றியப்பகுதிகளிலும் அதிக குழந்தை பெற்றுக்கொண்ட பெண்கள், அவர்களது கணவர், அவர்களது குடும்பத்தினருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி இந்த நிலையை முற்றிலும் தடுத்து நிறுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இப்பணியில் பகுதி சுகாதார செவிலியர்கள், கிராம சுகாதார செவிலியர்கள், ஆஷா பணியாளர்களின் பங்கு முக்கியமானதாகும். சுகாதாரத்துறையின் பல்வேறு பணிகளில் கிராம சுகாதார செவிலியர்கள் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வெற்றிகரமாக செயல்படுத்தியுள்ளதற்காக எனது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கின்றேன். ஒரு கிராமத்தின் முன்னேற்றத்தில் நீங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றீர்கள் என்றார்.

Spread the love