January 23, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

கிளாக்ஸோஸ்மித்கிளைன் பார்மசூட்டிகல்ஸ் 4வது காலாண்டில் ரூ.14.33 கோடி லாபம் ஈட்டியது

புது தில்லி, மே 20

முன்னணி மருந்து தயாரிப்பில் ஈடுபட்டு வரும் கிளாக்ஸோஸ்மித்கிளைன் பார்மசூட்டிகல்ஸ் நிறுவனத்தின் நான்காவது காலாண்டில் ரூ.14.33 கோடி நிகர லாபத்தை ஈட்டியுள்ளது. இதுகுறித்து அந்த நிறுவனம் பங்குச் சந்தையிடம் தெரிவித்துள்ளதாவது:

2020-21வது நிதியாண்டின் ஜனவரி-மார்ச் காலாண்டில் நிறுவனத்தின் ஒட்டுமொத்த செயல்பாட்டு வருமானம் ரூ.813.75 கோடியாக இருந்தது. இது நிறுவனம் முந்தைய 2019-20ம் நிதியாண்டின் இதே காலகட்டத்தில் ஈட்டிய வருமானம் ரூ.775.80 கோடியுடன் ஒப்பிடுகையில் அதிகம் ஆகும். மதிப்பீட்டு காலாண்டில் நிகர லாபம் ரூ.138.07 கோடியிலிருந்து ரூ.14.33 கோடியாக சரிந்துள்ளது.

2020-21 முழு நிதியாண்டில் நிறுவனத்தின் நிகரலாபம் ரூ.93.20 கோடியலிருந்து ரூ.358.15 கோடியாக உயர்ந்துள்ளது. ஒட்டுமொத்த செயல்பாட்டு வருவாய் ரூ.3,224.38 கோடியிலிருந்து ரூ.3,198.86 கோடியாக சரிந்துள்ளது.

மேலும், கடந்த மார்ச் 31ம் தேதியுடன் முடிவடைந்த நிதியாண்டுக்கு ரூ.10 முகமதிப்பு கொண்ட பங்கு ஒவ்வொன்றுக்கும் ரூ.30 ஈவுத்தொகை வழங்க தாய் நிறுவனத்தின் இயக்குநர் குழு பரிந்துரை செய்துள்ளதாக கிளாக்ஸோஸ்மித்கிளைன் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Spread the love