குங்கிலியம் காடுகளில் தானாக வளரும் கருமருது எனப்படும் மரத்தின் பிசினே குங்கிலியம் ஆகும். நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். தூய வெண்மையான நிறம், வெள்ளை குங்கிலியம் அகமருந்தாகவும், பழுப்பு நிறமுடையது புற மருந்தாகவும் பயன்படும். இதனை இளநீரில் கொதிக்க வைத்து சுத்தி செய்த பின் பயன்படுத்துதல் சாலச் சிறந்தது. உடல் வெப்பம் மிகுதல், கோழை அகற்றுதல், தடிப்பு உண்டாக்குதல், தீ நாற்றம் நீக்கல் ஆகிய மருத்துவ குணம் உடையது. குங்கிலியத்தை பொடித்து ஒரு கிராம் அளவாக 250 மில்லி பாலில் கலந்து காலை பருகி வர தாது பலம் மிகும். குங்கிலியத்துடன் சம அளவு பொரித்த படிகாரம் கலந்து அரை கிராம் அளவாக சர்க்கரை சேர்த்து கொடுத்து வர பசியின்மை, சீத கழிச்சல், வெள்ளை பெரும்பாடு, உள் மூலம் ஆகியவை குணமாகும். குங்கிலியம் 20 கிராம், மாம்பருப்பு 25 கிராம், இலவம் பிசின் 10 கிராம், ஜாதிக்காய் 25 கிராம், உலர்ந்த வில்வ பழ சதை 25 கிராம் ஆகியவற்றை பொடித்து கலந்து வைத்துக் கொண்டு 250 மில்லி அளவாக 2 அல்லது 3 வேளை நெய்யில் குழைத்து கொடுத்து வர நீர்த்த கழிச்சல், சீத கழிச்சல் ஆகியவை தீரும்.
குங்கிலியம்

Spread the love