September 21, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

குடற்புழு நீக்கும் அல்பென்டசோல் மாத்திரைகள் இலவசமாக வழங்கும் முகாம்

நாமக்கல் மாவட்டத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்து துறையின் சார்பி;ல் 13.09.2021 முதல் 18.09.2021 வரை முதல் சுற்றும் 20.09.2021 முதல் 25.09.2021 வரை இரண்டாம் சுற்றும் திங்கள் வியாழன் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளிலும் 27.09.2021 திங்கள் கிழமை அன்று விடுபட்ட குழந்தைகளுக்கும் குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் முகாம்கள் நடைபெறவுள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 1 வயது முதல் 19 வயது வரை உள்ள 5,89,401 குழந்தைகளுக்கும்; 20-30 வயது வரை உள்ள கர்ப்பிணி அல்லாத 153830 பெண்களுக்கும் குடற்புழு நீக்கும் அல்பென்டசோல் மாத்திரைகள் இலவசமாக வழங்குவதற்கான துவக்க நிகழ்ச்சி எர்ணாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி. சிங் பள்ளி மாணவ மாணவியர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பேசுகையில் தெரிவித்ததாவது

இங்கு வந்துள்ள மாணவ மாணவியர்கள் தங்கள் குடும்பத்தில் உள்ள 19 வயதிற்குட்பட்ட அவைருக்கும் குடற்புழு மாத்திரையின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்து விழிப்புணர்வை ஏற்படுத்திட வேண்டும். அனைவருக்கும் இம்மாத்திரைகள் அங்கன்வாடி மையங்களிலும் வழங்கப்பட்டு வருகின்றது.

தங்கள் பள்ளிகளில் அனைத்து வியாழக்கிழமைகளிலும் அரசால் வழங்கப்படுகின்ற இரும்பு சத்து மாத்திரைகளை மாணவ மாணவியர்கள் அனைவரும் கட்டாயம் தவறாமல் சாப்பிட வேண்டும். இதனால் இரத்தசோகை குறைபாடு வராமல் தடுக்கப்படுவதோடு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து சுறுசுறுப்பாக இருக்கவும் அறிவுத்தி;றன் மற்றும் உடல் வளர்ச்சியை மேம்படுத்தவும் ஆரோக்கியமாக இருக்கவும் முடியும். இது போன்ற சத்தான மாத்திரைகளை எடுத்துக்கொள்வதால் இன்று மட்டுமின்றி வாழ்நாள் முழுவதும் நாம் ஆரோக்கியமாக இருக்க முடியும் என்றார்.

இந்நிகழ்ச்சியில் குடற்புழு நீக்க கையேட்டினை மாவட்ட ஆட்சியர் வெளியிட முதன்மை கல்வி அலுவலர் அவர்கள் மற்றும் பள்ளி; தலைமையாசிரியர் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

Spread the love